அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்
Hit Counterபார்வையாளர்கள்

சர்வதேச குடிசார் வான் பயண அமைப்பின் ( INTERNATIONAL CIVIL AVIATION ORGANIZATION - ICAO) தரத்துடன் கூடிய புகைப்படம் பெற்றுக்கொள்ளல்.

எமது திணைக்களத்தின் ஊடாக தற்பொழுது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உயர் தரத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுவதுடன்,அடையாள அட்டைக்காக உட்சேர்க்கப்படும் புகைப்படம் சர்வதேச குடிசார் வான் பயண அமைப்பின் ( INTERNATIONAL CIVIL AVIATION ORGANIZATION-ICAO ) தரத்துக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.

ICAO தரத்துடன் கூடிய புகைப்படத்தை எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும்

 1. இளம் நீல நிறத்துடன் கூடிய பின்னணி,
  புகைப்பட கருவிக்கு எதிர் நேராக முகம் அமைந்திருத்தல் வேண்டும்,                  
  கண்கள் திறந்த நிலையிலும் மற்றும் தெளிவாக தெரியும்படி அமைந்திருத்தல் வேண்டும்,
  வாய் மூடப்பட்டு புன்னகை இல்லாமலும் மற்றும் முகத்தில் எவ்விதமான முக பாவனைகளும் இல்லாமல் முகம் நடுநிலையான பாவனையுடன் அமைந்திருத்தல் வேண்டும்,
  மூக்குக்கண்ணாடி அணித்திருப்பின் அதன் ஊடாக கண்கள் மிகத்தெளிவாக தெரியும் விதத்தில் புகைப்படம் அமைந்திருத்தல் வேண்டும்.
  பெறப்படும் மி.மீ 45 (உயரம்) X மி.மீ 35 ( அகலம்) அளவுடைய புகைப்படத்தின் மூன்று பிரதிகள் புதிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும்போது வழங்கப்படவேண்டும்.

 2. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும், பெறப்படும் புகைப்படத்தில் முழுமையாக பூரணப்படுத்தபட்டிருத்தல் வேண்டும்.

 3. மேலே குறிப்பிடப்பட்டுள்ள தரத்துக்கு உட்பட்ட புகைப்படத்தை பெற்றுக்கொள்வதற்கு ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள புகைப்பட நிலையத்தை அணுகவும்.

இம்முறையின் கீழ் புகைப்படத்தை பெற்றுக்கொள்ளும்போது

 1. புகைப்படத்தின் மூலப்பிரதி விண்ணப்பதாரருக்கு வழங்கப்பமாட்டாது.புகைப்படத்தின் இலக்கத்தை இயந்திரம் மூலமாக வாசிக்ககூடிய QR குறியீட்டையுடைய,விண்ணப்பதாரரின் புகைப்படம் அச்சிடப்பட்ட பற்றுச்சீட்டு (PHOTOGRAPH FEFERENCE SLIP )புகைப்பட நிலையத்தினால் விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும்.
 2. புகைப்பட நிலையத்தின் மூலம் குறித்த புகைப்படம் நிகழ்நிலை முறைமை(ONLINE) ஊடாக ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
 3. வழங்கப்பட்டுள்ள பற்றுச்சீட்டை கிராம சேவையாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
 4. இப்புகைப்படம் செல்லுபடியாகும் காலம் , புகைப்படம் பெறப்பட்ட தினத்தில் இருந்து 06 மாதங்களுக்கு மட்டுமே ஆகும்