2016 ஆம் ஆண்டு முதல் தேசிய அடையாள அட்டை இலக்கத்தில் மாற்றம்.
பொது மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்பினை ஏற்படுத்தாதவண்ணம், புதிய வேலைத்திட்டத்தின் கீழ் மேற்குறிப்பிட்ட இலக்க மாற்றத்தினை மேற்கொள்வதற்கு திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. புதிய அடையாள அட்டை இலக்கத்தினை தயாரிக்கும் போது, தற்பொழுது விநியோகிக்கப்பட்டுள்ள அடையாள அட்டை இலக்கத்துடனான பொருத்தப்பாட்டில் குழப்பம் ஏற்படாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே இணைப் பிரதியினைப் பெற்றுக் கொள்ளும் வரையும் தற்பொழுது பாவனையிலுள்ள அடையாள அட்டை இலக்கமானது செல்லுபடியாகும். மேலும் புதிய அடையாள அட்டை இலக்கத்துடன் தயாரிக்கப்படும் அடையாள அட்டையின் பின் பக்கத்தில், முன்னர் பாவித்த அடையாள அட்டை இலக்கம் அச்சிடப்பட்டிருக்கும்.
|
![]() |