அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்
Hit Counterபார்வையாளர்கள்
 

தென் மாகாண அடையாள அட்டை காரியாலயம் மற்றும் அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவையினை ஆரம்பித்தல்

 
 

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் தென் மாகாண அடையாள அட்டை காரியாலயம் மற்றும் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவையினை ஆரம்பித்தல் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய தலைமையில் 2019.09.06ஆம் திகதி பிற்பகல் 3.00 எனும் சுபவேளையில் காலி கடவத்சதர பிரதேச செயலக வளாகத்தில் நடைபெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வைபவ நிகழ்வுக்காக உள்ளக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களும், உள்ளக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துல அவர்கள் உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடைய வழிகாட்டல் மற்றும் பிரதமர் அவர்களின் விசேட அனுமதியில் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் சேவையினை பரவலாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படும் இந்த தென் மாகாண காரியாலயத்தினுள் பலவிதமான சேவைகளை நிறைவேற்றுவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படும்.

பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான மற்றும் செயலாக்கமுடைய சேவையினை வழங்கும் நோக்கில் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினை பரவலாக்கும் வேலைத்திட்டத்தினை மேலும் பரப்புவதற்காக இத்தகைய மாகாண காரியாலயங்களை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கமைவாக வடமேல் மாகாண காரியாலயம் குருநாகலிலும் , கிழக்கு மாகாண காரியாலயம் மட்டக்களப்பிலும் , வட மாகாண காரியாலயம் வவுனியாவிலும் அமைக்கப்பட்டு தற்போது வரை மிகவும் வெற்றிகரமாக சேவைகள் வழங்கப்படுகின்றன.

 
     

1968ஆம் ஆண்டு  32ஆம் இல ஆட்களைப் பதிவு செய்யும் சட்டம் மற்றும் 2016ஆம் ஆண்டு  08ஆம் இல திருத்தப்பட்ட சட்டத்தின் விதிகளின் பிரகாரம் தகுதி பெற்ற இலங்கை பிரஜையினை பதிவுசெய்து தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடைபெறுவதற்காக திணைக்களத்தினுள் செயற்படும் சாதாரண மற்றும் ஒருநாள் சேவைகள் மாகாண அலுவலகத்திலும் செயற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைவாக அவசர தேவைகளுக்காக ஒருநாள் சேவையின் கீழ் அடையாள அட்டை விநியோகிக்கும் வேலைத்திட்டம் மாகாண காரியாலயத்திற்கு பரவலாக்கும் திட்டத்தின் முதல் திட்டமாக தென் மாகாண காரியாலயத்தினுள் ஆரம்பிப்பதற்கு சகல நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாகாண காரியாலயம் மூலம் தென் மாகாண, இத்தீவின் எந்தவொரு பிரதேசத்தின் பிரஜைக்கும் ஒருநாள் சேவையின் கீழ் தங்களுடைய தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை கருத்திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள பிரதேச காரியாலயங்கள் தற்போது வரை VPN தொழிநுட்பத்தின் ஊடாக பிரதான காரியாலயத்தின் தரவுத்தளத்துடன் வலைப்பின்னல் (Network) தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. அதனால் தென் மாகாண மக்கள்  சாதாரண சேவையின் கீழ் அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்காக ஒழுங்குமுறையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தினை தமது பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிளைக் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கமுடியும்.

எனவே தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொள்வதற்காக சாதாரண சேவையின் கீழ் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களின் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்ற சகல விண்ணப்பங்களுக்குரிய தேசிய அடையாள அட்டை தயாரிக்கும் ஏனைய நடவடிக்கைகள் இத் தென் மாகாண காரியாலயம் மூலம் நடைபெறும். அவ்வாறே அந்த விண்ணப்பம் தொடர்பாக விசாரணை நடவடிக்கை மற்றும் தேசிய அடையாள அட்டை தொடர்பான ஏனைய சேவை தேவைகளும் இக் காரியாலயத்தின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ள முடியுமாகவுள்ளது தென் மாகாண மக்களுக்கு விசேட வசதியாகும்.

அவ்வாறே தென் மாகாண சகல பிரதேச செயலகங்களினுள் அமைக்கப்பட்டுள்ள ஆட்களைப் பதிவு செய்யும் பிரதேச காரியாலயத்தினால் மேற்பார்வை , வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தல், நடமாடும் சேவைகளை நடத்துவது உட்பட அனைத்து கடமை நடவடிக்கை செயற்பாடுகளும் தென் மாகாண காரியாலயம் மூலம் இடம்பெறவுள்ளது.

மேலும் தீவு பூராகவும் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள புகைப்பட நிலையங்கள் மூலம் சர்வதேச சிவில் விமான சேவை  அமைப்பின் (International Civil Aviation Organization - ICAO) தரத்திற்கமைவாக புகைப்படம் இயங்கலை (Online) செய்முறை ஊடாக திணைக்களத்தின் தரவுத்தளத்திற்கு பெற்றுக்கொள்ளல், புதிய தொழிநுட்பம் கலந்த ஸ்மாட் அடையாள அட்டை (Smart Identity Card) விநியோகிப்பதற்கு தற்போது வரை திணைக்களம் நடவடிக்கை எடுக்கிறது.

இந்த சகல வேலைத்திட்டங்களின் ஊடாக பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான மற்றும் இலகுவாக தமது தேசிய அடையாள அட்டை தொடர்பான சேவைக்கான வாய்ப்பினை வழங்குவதன் மூலம் தனிநபர் அடையாளத்தை மிகவும் நம்பகமாக உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்  ஆட்களைப் பதிவு செய்வதற்கான  முக்கிய நோக்கமென நினைவில் கொள்ள வேண்டும்.