அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்
Hit Counterபார்வையாளர்கள்
   
 

மாகாண /கிளைக் காரியாலயம்

2006.05.17 ஆம் திகதியின் அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய “அடையாள அட்டை விநியோகிக்கும் நடைமுறை கணனிமயப்படுத்தும் துரித வேலைத்திட்டம்” கீழ் தற்பொழுது கொழும்பில் அமைந்துள்ள பிரதான காரியாலயத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட திணைக்களத்தின் இயக்க நடவடிக்கைகளைப் பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய இலத்திரனியல் அடையாள அட்டை செயற்திட்டத்தின் கீழ் அனைத்துப் பிரதேச செயலகங்களிலும் ஆட்களைப் பதிவு செய்யும்  திணைக்களத்தின் கிளைக் காரியாலயங்களை நிறுவுவதற்கும் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கக​கூடிய வகையில் மாகாண காரியாலயத்தை  அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கை முழுவதுமுள்ள 331 பிரதேச செயலகங்களிலும் ஆட்களைப் பதிவு செய்யும் கிளைக் காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக இரண்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அடையாள அட்டைகள் விநியோகிப்பது தொடர்பில் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது.

 

நோக்கம்

 1. இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை செயற்திட்டத்தின் கீழ் அனைத்துப் பிரதேசத்தையும் உள்ளடக்கும் வகையில் சரியாகவும் முறையாகவும் தரவுகளை ஒன்று சேர்க்கும் நடவடிக்கையை நடைமுறைப்படுத்தல்.
 2. தற்பொழுது அடையாள அட்டை காணப்படாத இலங்கைப் பிரஜைகளை அதனைப் பெற்றுக் கொள்வதற்கு உந்துதல்.
 3. திணைக்களத்திற்கு  கிடைக்கப்பெறும் விண்ணப்பப்படிவங்களை பரீட்சித்து குறைபாடின்றி அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக முன்வைத்தல்.
 4. கொழும்பிற்கு வெளியே வசிக்கும் பிரஜைகளுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுக்கும் நடைமுறையைத் துரிதப்படுத்தல்.
 5. திணைக்களத்தில் அடையாள அட்டை விநியோகிக்கும் நடைமுறையை இலகுபடுத்தல் மற்றும் வினைத்திறன் மிக்கதாக்குதல்.

 

மாகாணக் காரியாலயம்

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பிரதான காரியாலயம் மேல் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன். அம்மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களுக்காக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் மாகாணக் காரியாலயத்தினை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய அனைத்து மாகாணங்களிலும் உள்ள பிரதேச செயலகங்களில் உள்ள கிளைக் காரியாலயங்களில் மேற்பார்வை, இணைப்பு மற்றும் அக்கிளைக் காரியாலயங்களுக்கு கிடைக்கப் பெறும் விண்ணப்பப்படிவங்களை மாகாணக் காரியாலயங்களுக்குப் பெற்றுக் கொண்டு, அடையாள அட்டையினை விநியோகிக்கும் செயல் முறையினைத் துரிதப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

 
     
 

 

 

 

 

 

செயல்படும் மாகாணக் காரியாலயங்கள்.

 1. தென் மாகாண அலுவலகம் - காலி கடவத்சத்தர பிரதேச செயலகம்.
 2. வடமேற்கு மாகாணக் அலுவலகம் - புதிய வர்த்தக வளாகம், குருநாகல்.
 3. வட மாகாணக் காரியாலயம் – வவுனியா கச்சேரி
 4. கிழக்கு மாகாணக் காரியாலயம் – மட்டக்களப்பு, மண்முனை பிரதேச செயலக வளாகம்.

இவ்விரண்டு மாகாணக் காரியாலயங்களும் முழுமையாக கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதுடன், அக்காரியாலயங்களுக்கு கிடைக்கப்பெறும் விண்ணப்பப்படிவங்கள் கணனி வலையமைப்பினூடாக கணனி மயப்படுத்தப்பட்டு, ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்கள பிரதான காரியாலயத்திற்கு கணனி வலையமைப்பினூடாக  (Online System) சமர்ப்பிக்கப்படும். அதன் மூலமாக பிரதான காரியாலயத்திற்கு இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தின் மற்றும் ஆவணங்களின் பிரதி கிடைக்கப் பெறுவதோடு, அதனூடாக ஆட்கள் பதிவு செய்யப்பட்டதினை உறுதிப்படுத்திக் கொண்டு அடையாள அட்டையானது அச்சிடப்பட்டு விண்ணப்பதாரிக்கு விநியோகிக்கப்படும். இந்நிலைமை பொது மக்களுக்கு அதிக நன்மை பயப்பதாக அமையும்.

 

உத்தேசிக்கப்பட்டுள்ள கிளைக் காரியாலயங்கள்

 1. சபரகமுவ  மாகாணக் காரியாலயம் – இரத்தினபுரி
 2. மத்திய மாகாணக் காரியாலயம் – நுவரேலியா
 3. ஊவா மாகாணக் காரியாலயம் – பதுளை
 4. வடமத்திய மாகாணக் காரியாலயம் – அநுராதபுரம்