அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்
Hit Counterபார்வையாளர்கள்
   
 

நீதிக் கிளையின் மூலம் இடம் பெறும் கடமைகள்

நீதிக் கிளையின் மூலம் பின்வரும் மூன்று பிரிவுகளாக கடமைகள் இடம் பெறுகின்றன.

 1. அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும் விண்ணப்பங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள்.
 2. திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அடையாள அட்டைத் தொடர்பிலான உறுதிப்படுத்தும் கடிதங்களை விநியோகித்தல்.
 3. விநியோகிக்கப்பட்ட ஆள் அடையாள அட்டை சம்பந்தமான சட்ட சிக்கல்களைத் தீர்த்தல்.

 

1. அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும் விண்ணப்பங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள்.

தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வது சம்பந்தமாக பொதுமக்களினால் இத்திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பப்படிவங்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பிலும், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் தொடர்பில் நம்பகமற்ற தன்மை ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் அவ்வாறான விண்ணப்பங்கள் நீதிக்கிளைக்கு சமர்ப்பிக்கப்படும். அவ்வாறான சந்தர்ப்பங்கள் கீழ் வருமாறு.

 1. விண்ணப்பப்படிவத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் போலியானதாக காணப்படுதல்.
 2. திருத்தத்திற்குரிய விண்ணப்பப்படிவத்துடன் இணைக்கப்பட்ட அடையாள அட்டையானது, திணைக்களத்தினால் இறுதியாக விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டையாக இல்லாதிருத்தல்.
 3. விண்ணப்பதாரிக்கு இதற்கு முன்னர் ஓர் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்ட போதிலும் அதுபற்றி வெளிப்படுத்தாது மீண்டும் முதற்தடவைக்கான விண்ணப்பப்படிவம் மூலம் விண்ணப்பித்தல்.
 4. விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்ட தரவுகள் திணைக்களத்தின் அறிக்கையுடன் முரண்பட்டு காணப்படல்.
 5. விண்ணப்பப்படிவத்துடன் போலி ஆவணங்கள், போலியான தரவுகளை சமர்பிக்கின்ற சந்தர்ப்பங்களில், அவ்விண்ணப்பப்படிவத்தினை நீதிக்கிளையில் நிறுத்திவைத்திருப்பதுடன், அப்பிரச்சினை தொடர்பில் உண்மையான காரணங்களை எமக்குத் தெரியப்படுத்துமாறு குறிப்பிட்டு, விண்ணப்பத்தில் உள்ள முகவரிக்கு விண்ணப்பதாரிக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரரினால் முன்வைக்கப்படும் வெளிப்படுத்துகையை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாக உறுதிப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில், அது தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் விண்ணப்பப்படிவமானது மேலதிக நடவடிக்கைகளுக்காக உரிய கிளைக்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறல்லாத சந்தர்ப்பத்தில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.
 6. முதற் தடவை பெற்றுக் கொண்ட அடையாள அட்டையினை சிதைவுகளுக்கு உட்படுத்தி முன்வைத்தல்.
 7.  போலியான தகவல்களை முன்வைத்து பல அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருத்தல்.
 8. அடையாள அட்டை பெற உரித்துடைய நபரை அதனைப் பெற்றுக் கொள்வதிலிருந்து தடை செய்தல்.
 
   
   
 

 

 

 

 

 

 

2. திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அடையாள அட்டை தொடர்பிலான உறுதிப்படுத்தும் கடிதங்களை விநியோகித்தல்.

அடையாள அட்டைகளின் உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்தப்பட வேண்டிய சந்தர்ப்பங்களில் சிற்சில நிறுவனங்கள் மூலம் நேரடியாகவோ அல்லது உரிய நபரின் ஊடாகவோ திணைக்களத்திடம் விசாரணை மேற்கொள்ளப்படும். அவ்வாறான சந்தர்ப்பங்கள் கீழ் வருமாறு.

 1. ஒரே நபரினால் இரு வேறு சந்தர்ப்பங்களில் இரண்டு அடையாள அட்டை இலக்கங்களை சமர்ப்பித்தல்.
 2. இரு வேறு நபர்கள் ஒரே அடையாள அட்டை இலக்கத்தினை பாவித்திருத்தல்.
 3. தேசிய பாதுகாப்பு நிறுவனங்களின் தேவைக்கேற்ப அறிக்கையினை வழங்குதல்.
 4. சட்ட நடவடிக்கையின் பொருட்டு நீதிமன்றங்களுக்கு அறிக்கையினை வழங்குதல்.
 5. வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு தேவையான அறிக்கைகளை வழங்குதல்.
 6. நபர்களின் தேவைககேற்ப பொலிஸ் இசைவுச் சான்றிதழுக்கான அறிக்கையினை வழங்குதல்.

 

அடையாள அட்டை இலக்கத்தினை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்கள்.

 1. 1972 மற்றும் 1973 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள்  மாத்திரமே செல்லுபடியானதாகும். அவ் அடையாள அட்டைகள் பழுதடைந்து, சிதைவடைந்து அல்லது தெளிவின்றி காணப்படுமாயின், அடையாள அட்டையின் இரண்டாம் பிரதியினைப் பெற்றுக் கொண்ட பின்னர் தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டும்.
 2. முன்வைக்கப்பட்ட அடையாள அட்டையின் தகவல்கள் திணைக்கள அறிக்கைகளுடன் முரண்பட்டு அல்லது, திணைக்கள அறிக்கைகளில் அவை பதியப்படாதிருப்பின், விண்ணப்பதாரரின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் மூலப் பிரதி, அவ் அடையாள அட்டை இலக்கத்தினை உபயோகித்தமையினை உறுதிப்படுத்தும் ஆவணங்களான கடவுச் சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம், வங்கிக் கணக்குப் புத்தகம், ஊழியர் சேமலாப நிதி அறிக்கை ஆகிய ஆவணங்கள் தேவையான போது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.