ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களத்திற்கு அமைவான சட்டப் பின்னணி
1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்யும் சட்டம் மற்றும் அதன் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்பட்டது. திணைக்கள நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான சட்டப்பின்னணியானது கீழ்வரும் சட்டம், கட்டளைகள், விதிமுறைகள் மற்றும் அறிவிப்புக்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டங்கள்
- 1968 ஆம் ஆண்டின் 32 ம் இலக்க ஆட்பதிவுச் சட்டம்.
- 1971 ஆம் ஆண்டின் 28 ம் இலக்க ஆட்பதிவுச் (திருத்த) சட்டம்.
- 1971 ஆம் ஆண்டின் 37 ம் இலக்க ஆட்பதிவுச் (திருத்த) சட்டம்.
- 1981 ஆம் ஆண்டின் 11 ம் இலக்க ஆட்பதிவுச் (திருத்த) சட்டம்.
- 2016 ஆம் ஆண்டின் 8 ம் இலக்க ஆட்பதிவுச் (திருத்த) சட்டம்.
கட்டளைகள்
- 1971.12.30 ஆம் திகதிய 14991 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 1971.12.16 ஆம் திகதிய கட்டளை.
- 1971.11.20 ஆம் திகதிய 637/6 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 1990.06.25 ஆம் திகதிய கட்டளை.
- 2005.03.29 ஆம் திகதிய 1386/17 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 2005.03.23 ஆம் திகதிய சட்டம்.
- 2015.12.22 ஆம் திகதிய 1946/31 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 2015.12.22 ஆம் திகதிய சட்டம்.
- 2017.05.31 ஆம் திகதிய 2021/28 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 2017.05.30 ஆம் திகதிய சட்டம்.
விதிமுறைகள்
- 1971.04.01 ஆம் திகதிய 14952 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 1971.03.28 ஆம் திகதியின் 2ஆம் பிரிவின் கீழான விதிமுறை.
1972.02.18 ஆம் திகதி 14998 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 1972.01.28 ஆம் திகதியின் 7ஆம் பிரிவின் கீழான விதிமுறை. |