அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்
Hit Counterபார்வையாளர்கள்
   
 

ஒரு நாள் சேவை

தங்களது அவசர தேவைகளின் போது மிகவும் வினைத்திறனான சேவையினூடாக தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுத்தருவதினை நோக்காகக் கொண்டு 2003.09.01 ஆம் திகதி முதல் ஒரு நாள் சேவை ஆரம்பிக்கப்பட்டது. இச் சேவையினைப் பெற்றுக் கொள்வதற்காக கிராம உத்தியோகத்தரினால் உறுதிப்படுத்தப்பட்டு பிரதேச செயலாளரினால் மேலொப்பத்துடன் அல்லது பாடசாலை மாணவர்களாயின் அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்ட அல்லது தோட்ட வதிவாளர்களாயின் தோட்ட அதிகாரியினால் உறுதிப்படுத்தப்பட்ட ஆ.ப.தி./வி./1,7,8 மூலம் முதற் தடவை அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்வதற்கு அல்லது அதன் இணைப்பிரதி ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்கு தேவைக் கேற்ப சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இச் சேவைக்காக அரச கட்டணமாக 1000 ரூபா அறவிடப்படுவதுடன், திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை (வேலை நாட்களில்) மு.ப. 08.00 முதல் பி.ப. 12.00 வரை விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக் கொள்ளபடுவதுடன் பி.ப. 4.15 வரை அடையாள அட்டை விநியோகிக்கப்படும். ஒரு நாள் சேவையினை மிகவும் வினைத்திறன் மிக்கதாக பொது மக்களுக்கு வழங்கும் நோக்கில் 2013.04.02 ஆம் திகதி முதல் குளிரூட்டப்பட்ட கட்டிடத்தில் இச்சேவை இடம்பெற்று வருகிறது. இந்தச் சேவையினூடாக நாளொன்றிற்கு அண்ணளவாக 1000 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுவதோடு, நேரகாலத்துடன் விண்ணப்பப்படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் துரிதமாக அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஒரு நாள் சேவைக்கு  விண்ணப்பப்படிவத்தினை சமர்ப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் சமுகமளிப்பது கட்டாயமாகும். ஆனபோதிலும் விசேட தேவை உடைய நபர்கள் (உடல், உள பாதிக்கப்பட்ட/ வயோதிபர்கள்) அவர்கள் தொடர்பில் கிராம சேவையாளர், பிரதேச செயலாளர்  உறுதிப்படுத்துவாராயின் தாய், தந்தை, வாழ்க்கைத்துணை, சகோதர சகோதரி அல்லது சட்ட பூர்வ பாதுகாவலரிடம் அடையாள அட்டையினை கையளிக்க முடியும்.

க.கொ.: தங்களினால் முன்வைக்கப்படும் விண்ணப்பப்படிவம் தெளிவற்ற கையெழுத்தில்  பூரணப்படுத்தப்பட்டிருப்பின்,முன்வைக்கப்பட்டுள்ள ஆவணங்களில்    தெளிவின்மை, அடையாள அட்டையின் தகவல்கள் தெளிவின்மை, அத்தகவல்கள் திணைக்கள அறிக்கைகளுடன் முரண்பட்டிருத்தல், முன்வைக்கப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் முகமாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படும். இதன் காரணமாக, தங்களின் அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படலாம். எனவே உரிய முறையில் சரியானதாக தங்களது விண்ணப்பப்படிவங்களை முன்வைக்க வேண்டும்.