அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்
Hit Counterபார்வையாளர்கள்
   
 

அடிக்கடி வினவப்படுபவை

எனக்கு தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்ள முடியுமா?

நீங்கள் 15 வயது பூர்த்தியடைந்த இலங்கைப் பிரஜையாயின் உங்களுக்கு தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

 

எனது தேசிய அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் எவை?

 • தங்களது பெயர், முகவரி அல்லது  அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தனியார் விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய சந்தர்ப்பத்தில்.
 • தங்களது தற்போதைய தோற்றம் அடையாள அட்டையிலுள்ள புகைப்படத்தைவிடவும் வித்தியாசப்படுமாயின்.
 • நீண்டகாலப் பாவனை காரணமாக அடையாள அட்டை தெளிவில்லாமல் காணப்படுமாயின்.
 • அடையாள அட்டையின் ஒரு பகுதி சேதமடைந்திருத்தல்.
 • தேசிய அடையாள அட்டையில் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்காகப் என்னால் முன்வைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் எவை?
 • உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட ஆ.ப.வி 1/7/8 விண்ணப்பப்படிவம்.
 • பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் உறுதிப்படுத்தப்பட்ட போட்டோ பிரதி (போட்டோ பிரதியானது பிரதேச செயலாளர் அல்லது அவரினால் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தரினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்).
 • 6 மாத காலத்தினுள் பெற்றுக்கொண்ட ICAO தரத்திலான புகைப்படம்
 • பௌத்தமதத் துறவிகளாயின் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால்  பெற்றுக் கொள்ளப்பட்ட சாமனேரு சான்றிதழ் அல்லது உபசம்பதா சான்றிதழின் உறுதிப்படுத்திய போட்டோ பிரதி.
 • ஏனைய மதங்களின் மதகுருமார் அவர்களது மதத்திற்குரிய திணைக்களத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ் அல்லது ஆவணம்.
 • துறவறத்திலிருந்து சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியவராயின் அதனை உறுதிப்படுத்தும் சான்றிதழ்.
 • கணவரின் குடும்பப் பெயரை உள்ளடக்குவதாயின் விவாகப் பதிவுச் சான்றிதழின் உறுதிப்படுத்திய போட்டோ பிரதி.
 
   
 

 

 

காணாமல் போன அடையாள அட்டைக்காக புதியதொரு அடையாள  அட்டையை எவ்வாறு பெற்றுக் கொள்வது?

 • அடையாள அட்டை காணமல்போயிருப்பின், காணாமல்போன பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து பொலிஸ் அறிக்கையின் மூலப் பிரதியினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
 • 6 மாத காலத்தினுள் பெற்றுக்கொண்ட ICAO தரத்திலான புகைப்படம் மற்றும் சான்றழிக்கப்பட்ட பிறப்பு சான்றிதழின் நகலை இணைக்கவும்.
 • க.கொ: காணாமல் போன அடையாள அட்டைக்காக இணைப்பிரதியினைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர், இணைப்பிரதியினைப் பெற்றுக்கொண்ட பின்னர் காணாமல் போன அடையாள அட்டை மீண்டும் கிடைக்கப் பெறுமாயின் அல்லது கண்டெடுக்கப்படுமாயின், உடனடியாக ஆணையாளர் நயாகத்திற்கு கையளிக்க வேண்டும்.

 

அடையாள அட்டைக்கான விண்ணப்பப்படிவம் ஒன்றினை எவ்வாறு பெற்றுக் கொள்ள முடியும்?

 • உரிய கிராம சேவைப் பிரிவிலுள்ள கிராம சேவை உத்தியோகத்தரிடம்.
 • தோட்டத் தொழிலாளராயின் தோட்ட அதிகாரியிடம்.
 • பாடசாலை மாணவர்கள் பாடசாலை அதிபரிடம் இருந்து.
 • ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பிரதான அலுவலகம்.
 • ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் மாகாணக் காரியாலயம்.
 • அனைத்துப் பிரதேச செயலகங்களில்.
 • அனைத்து மாவட்டச் செயலகங்களில்.
 • திணைக்கள வலைத்தளத்தினூடாக – www.drp.gov.lk

 

அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை  யாரிடம் கையளிக்க வேண்டும்.

 • தாம் வசிக்கின்ற பிரிவின் கிராம சேவை உத்தியோகத்தரிடம் அல்லது தோட்டத்தில் வசிப்பவராயின் தோட்ட அதிகாரியிடம் அல்லது பாடசாலை மாணவராயின் அதிபரிடம் சான்றுறுதிப்படுத்துவதற்காக கையளிக்க வேண்டும்.
 • சான்றுறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்தில் அல்லது மாகாணக் காரியாலயத்தில் அல்லது நேரடியாக வருகைதந்து கையளிக்க முடியும்.
 • ஒரு நாள் சேவையினூடாக பெற்றுக் கொள்வதற்காயின், கிராம சேவை உத்தியோகத்தர் உறுதிப்படுத்தியப் பின்னர் பிரதேச செயலாளர் மூலம் மேலொப்பமிடப்பட்டு பின்னர் கொழும்பிலுள்ள ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பிரதான காரியாலயத்திலுள்ள ஒரு நாள் சேவைக் கிளையில் கையளிக்க  முடியும் (ஒரு நாள் சேவைக்காக சான்றிதழ்களின் மூலப் பிரதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.)

 

அடையாள அட்டையினை முதல் முறையாகப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிக்கும் போது, திருத்தத்தினை மேற்கொள்ளும்  போது அல்லது காணாமல் போன அடையாள அட்டைக்கான இணைப்பிரதியினைப் பெற்றுக் கொள்வதற்காக உபயோகிக்கப்படும் விண்ணப்பப்படிவங்கள் ஒன்றோடொன்று வேறுபடுமா?

      இல்லை, அவ்விண்ணப்பப்படிவம் ஆ.ப.தி.வி. 1,7,8 ஆகும்.

      இது உரிய சான்றுறுதிப்படுத்தும் உத்தியோகத்தர்கள் மூலம் QR Code ஊடாக குறித்த விண்ணப்பதாரிக்கான விண்ணப்பப்படிவம் நியமிக்கப்படுகிறது.                                                                                              

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் மூலப் பிரதி கட்டாயமானதா?

 • உங்களது வயது 40 ற்கு குறைந்ததாயின், மற்றும் பிறப்பத்தாட்சிப் பத்திரம் இல்லையாயின், உத்தேச வயதுச் சான்றிதழ் ஒன்றினைப் பிரதேச செயலகத்தில் மேலதிக மாவட்டப் பதிவாளரிடம் பெற்றுக் கொள்ளுங்கள்.
 • உங்களது வயது 40ற்கு மேற்பட்டதாயின், பிறப்பத்தாட்சிப் பத்திரம் இல்லையாயின், மேலதிக மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பெற்றுக் கொண்ட தேடுதல் விளைவுப் பத்திரத்துடன் குறைந்தபட்சம் கீழ் குறிப்பிடப்படும் ஆவணங்களில் ஒன்று அத்துடன், தற்பொழுது பாவிக்கும் பிறந்த திகதியை உறுதிப்படுத்தும் சத்தியக்கடதாசியினை திணைக்களத்திற்கு முன்வைக்கவும்.
 • பாடசாலை விடுகைப் பத்திரம்
 • ஞானஸ்நான சான்றிதழ்
 • தங்கள் பிள்ளைகளின் பிறப்பத்தாட்சிப் பத்திரம்.
 • பிரஜா உரிமைச் சான்றிதழ்
 • கடவுச் சீட்டின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
 • ஏற்றுக் கொள்ளக்கூடிய ஜாதகக் குறிப்பு
 • பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் இல்லாத ஒருவர், வாக்காளராக பதிவு செய்திருக்கும் நபர்களுக்காக தேடுதல்  விளைவுப் பத்திரத்துடன் DRP/OP/01/DS/03 (වෙළුමII) மற்றும் 2016.01.06 ஆம் திகதியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைவான சத்தியக் கடதாசி.

 

ஒரு நாள் சேவைக்கு எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்? அதற்கான கட்டணம் எவ்வளவு?

 • தங்களது தேவைக்கு ஏற்ப முதல் தடவை அடையாள அட்டைபெற்றுக் கொள்வதற்காக அல்லது காணப்படும் அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்ளவோ அல்லது காணாமல் போன அடையாள அட்டைக்காக இணைப்பிரதியைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பப்படிவத்தினை சரியாகப் பூர்த்தி செய்து சரியான ஆவணங்களுடன் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பிராதான காரியாலயத்திற்கு வருகை தந்து அரச கட்டணம் 1000/- ரூபா செலுத்தி ஒரு நாள் சேவைக்காக விண்ணப்பத்தினை முன்வைக்க முடியும்.

 

வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் இல்லாவிடின் அடையாள அட்டை பெற்றுக் கொள்ள முடியுமா?

முடியும். அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கு, வாக்காளர் பெயர் பட்டியலில் பதிவு செய்திருத்தல் அத்தியவசியமன்று, ஆன போதிலும் அவ்வாறு பதிவு செய்திருத்தல் தங்களது அடையாளத்தினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான இன்னுமொரு முக்கிய சாட்சியாகும்.

 

நிரந்தர வதிவிடம் இல்லாவிடில் அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்ள முடியுமா? அது எவ்வாறு?

 • தாங்கள் தற்பொழுது வசிக்கும் கிராம சேவையாளர் பிரிவின் கிராம சேவையாளர் ஊடாக அடையாள அட்டைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க முடியும்.

 

வெளிநாட்டில் வசிப்பவராயின் அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க முடியுமா?

விண்ணப்பிக்க முடியாது. இலங்கைக்கு வருகை தந்த பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.

 

 அடையாள அட்டையினை மொழிபெயர்ப்பு செய்ய முடியுமா? அதற்காக என்ன செய்ய வேண்டும்?

திணைக்களத்தின் இயக்கக் கிளையினூடாக தங்களது அடையாள அட்டை தொடர்பான விபரங்களை ஆங்கிலத்திற்கு மொழி பெயர்ப்பு செய்து கொள்ள முடியும். அதற்கான கட்டணமாக 1000/- ரூபா செலுத்த வேண்டும்.

 

இரட்டைப் பிரஜா உரிமையைப் பெற்றுக் கொண்ட ஒருவர் தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்வது எவ்வாறு?

இலங்கைப் பிரஜா உரிமை இரத்து செய்யப்பட்டு குடியுரிமைச் சட்டத்தின் 19(2) ஆம் பிரிவின் படி இரட்டைப் பிரஜா  உரிமையினைப் பெற்றுக் கொண்ட நபர் ஆ.ப.தி/வி/ 1,7,8 விண்ணப்பப்படிவத்தினூடாக விண்ணப்பிக்க முடியும். அந் நபர் இதற்கு முன்னர் அடையாள அட்டை ஒன்றினைப் பெற்றிருந்தால் அவ் அடையாள அட்டையினை ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகத்திடம் சமர்ப்பித்து அதற்கான பற்றுச் சீட்டினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்நபர் முதல் தடவை பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை ஒன்றினை பெற்றுக் கொள்ளும் விதமாக விண்ணப்பித்து புதிய அடையாள அட்டை ஒன்றினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இலங்கைப் பிரஜா உரிமை இரத்து செய்யப்படாமல் நிரந்தர வீசா மூலம் பிறிதொரு நாட்டில் வசிக்கின்ற ஒருவர் குடியுரிமைச் சட்டம் 19(3) பிரிவிற்கு அமைய இரட்டைப் பிரஜா உரிமையைப் பெற்றிருப்பின் அல்லது அந்நபர் இதற்கு முன்னர் அடையாள அட்டை ஒன்றினைப் பெற்றிருப்பின் அவ் அடையாள அட்டையினை உறுதிப்படுத்தி ஆ.ப.தி./வி. 1,7,8  விண்ணப்பப்படிவத்தினூடாக விண்ணப்பிக்க முடியும்.

 

 இலங்கைப் பெற்றோர்களுக்கு, வெளிநாட்டில் பிறந்த பிள்ளைக்கு தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்ள முடியுமா? அதற்காக என்ன செய்ய வேண்டும்?

தங்களுக்கு அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்ள முடியும். 1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க தனிநபர் சட்டத்தின் 5(2) ஆம் பிரிவிற்கு அமைவாக பிறந்த நாட்டின் இலங்கைகான வெளிநாட்டு தூதரகத்தினூடாக அல்லது இலங்கைக் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிரஜா உரிமைக் கிளைக்கு விண்ணப்பப்படிவத்தினை நேரடியாக கையளித்து அல்லது குறித்த பிள்ளையின் பிறப்பினைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட பிள்ளை 21 வயது பூர்த்தியடைந்து 22 வயது வரை இலங்கைப் பிரஜையாவார். (அப் பிள்ளைக்கு அக்கால கட்டத்தினுள் குறித்த நாட்டின் பிரஜா உரிமை இருப்பது தொடர்பில் எவ்வித பாதிப்புமில்லை.) அதற்கமைய தனிநபர் சட்டத்தின் 5(2) பிரிவின் கீழ் விநியோகிக்கப்படும் சான்றிதழ் மற்றும் பதிவாளர் நாயகத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் பிறப்புச் சான்றிதழுடன், 16 வயது பூர்த்தியானதன் பின்னர் திணைக்களத்திற்கு விண்ணப்பப்படிவம் ஒன்றினை சமர்ப்பித்து அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

க.கொ.: 21 வயது பூர்த்தியடைந்து 22 வயதினை அடைந்த பின் பிறிதொரு நாட்டின் பிரஜா உரிமையை விடுத்து, இலங்கைப் பிரஜா உரிமையை மாத்திரம் கொண்டிருப்பவராயின், அது பற்றி குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராஜா உரிமைக் கிளை உத்தியோகத்தர்களிடம் தெரிவித்து, உரிய 5(2) பிரிவினை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்தும் இலங்கைப் பிரஜா உரிமையினைத் தக்கவைத்திருப்பது தொடர்பில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தல் கட்டாயமானதாகும்.

 

அடையாள அட்டையினை எந்தவொரு நபரிற்கும் காட்டமுடியுமா? எச்சந்தர்ப்பத்தில் அடையாள அட்டையினை முன்வைக்க வேண்டும்? அடையாள அட்டை முன்வைப்பதனை நிராகரிக்க முடியுமா?

 ஆட்களைப் பதிவு செய்யும் சட்டத்தின் 15 ஆம் பிரிவின் கீழ், அதற்கமைவான 2005.03.29 ஆம் திகதிய 1380/17 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கட்டளையின் படி உத்தியோகத்தர்கள் அடையாள அட்டையினைப் பரீட்சிப்பதற்கு அடையாள அட்டையினைக் கேட்கும் போது, வைத்திருப்பதற்காகவும் சட்டத்தின் கட்டளைகளுக்கு அமைய நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் வருமாறு

 • மாவட்டச் செயலாளர்
 • மேலதிக மாவட்டச் செயலாளர்
 • பிரதேச செயலாளர்
 • கிராம உத்தியோகத்தர்
 • தொழில் ஆணையாளர் நாயகம்
 • தொழில் ஆணையாளர்
 • உதவி தொழில் ஆணையாளர் / தொழில் உத்தியோகத்தர்
 • குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் 7 (அ) 2 ஆம் பிரிவிற்கு அமைவாக ஆயுதப் படையினர்
 • குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் 4 (1) ஆம் பிரிவிற்கு அமைவாக நியமிக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள்.
 • எந்தவொரு பொலிஸ் நிலையத்தினதும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்
 • தபால் மற்றும் தொலைத் தொடர்பு  திணைக்கள விசாரணை உத்தியோகத்தர்கள்.

மேற்குறித்த உத்தியோகத்தர்கள் தவிர்ந்த எந்தவொரு உத்தியோகத்தரும், நபரும் அடையாள அட்டையினைக் கேட்டல், பரீட்சித்தல், வைத்திருத்தல் சட்ட விரோதமாகும். அவ்வாறான ஒரு நபர் அடையாள அட்டையினை கேட்கும் சந்தர்ப்பத்தில் உங்களால் நிராகரிக்க முடியும். மேலே குறிப்பிடப்பட்ட சட்டத்திற்கு அமைவாக, அடையாள அட்டையினைப் பரீட்சிப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தரிற்கு அடையாள அட்டையினை சமர்ப்பிப்பது கட்டாயமாகும். ஆனபோதும் தாங்கள் ஏதாவது சேவையினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் முகமாக தங்களது விருப்பத்துடன் அடையாள அட்டையினை சமர்ப்பிக்க முடியும்.

 

ஏதும் பொருட்கள் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் அடையாள அட்டையினைப் பிணையாக வைத்திருக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளது. அவ்வாறு அடையாள அட்டையினை பிறிதொரு நபரோ அல்லது  நிறுவனமோ தம்வசம் வைத்திருக்க முடியுமா?

அடையாள அட்டையினைப் பிணையாக வைத்து எந்தவொரு பொருட்களையும் சேவைகளையும் பெற்றுக் கொள்ளுதல் சட்ட பூர்வமானதன்று

சில நிறுவனங்கள் தமது சேவையினை வழங்கும் பொருட்டு அடையாளத்தினை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் அடையாள அட்டையினைக் கேட்கும் போது, அதனை சமர்ப்பித்து தமது ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்

 

தமக்குரிய அடையாள அட்டையினை பிறிதொருவர் வசம் வைத்திருக்க முடியுமா?

அவ்வாறு செய்ய  முடியாது.