அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்
Hit Counterபார்வையாளர்கள்
   
 

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக் கருத்திட்டம்

தேசிய பிரஜைகள் தரவுக் கட்டமைப்பில் இலத்திரனியல் தேசிய தரவு மையம் ஒன்றினை உருவாக்கி இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கின்ற ஒரே ஒரு அதிகாரம் பெற்ற நிறுவனமாக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் விளங்குகின்றது. 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்யும் சட்டத்தினால் மற்றும் 1971 ஆம் ஆண்டு அதற்காக அமைக்கப்பட்ட ஒழுங்கு விதிகளினால் மற்றும் அதன் சட்டபூர்வ நிலைமைகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் மூலம் அமுலாக்கம் பெற்றுள்ளது.

நாட்டின் அபிவிருத்திக்கு மற்றும் அரச சேவையினை வினைத்திறனுடன் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு, நவீன தொழில் நுட்பத்தினை உபயோகிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறையிலுள்ள தேசிய அடையாள அட்டையினை சமகாலத் தேவைக்குப் பொருந்தும் வகையில் பாதுகாப்புக் உத்திகளுடனான இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதனூடாக பொதுமக்கள் தமது சேவையிளை வினைத்திறனுடனும் பண்பு ரீதியான சேவையினை மக்கள் பெற்றுக் கொள்ளும் முகமாக இக்கருத்திட்டமானது திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க நம்பகமான முறையில் இலங்கைப் பிரஜையினை அடையாளம் காண்பதற்காக, 15 வயதிற்கு மேற்பட்ட பிரஜைகளின் உயிரியல் தரவுகள், அவர்களின் உயிரியல் பண்பான விரல் அடையாளம், சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பின் (International Civil Aviation Organization – ICAO) தரத்திற்கமைய பெற்றுக் கொள்ளப்பட்ட அந்நபர்களின் புகைப்படங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தகவல்களைப் பெற்றுக் கொண்டு, தேசிய பிரஜைகள் தரவுக் கட்டமைப்பில் இலத்திரனியல் தேசிய தரவு மையம் ஒன்றினை உருவாக்கி அதனூடாக உரிய வயதினை அடைந்த பிரஜைகளை அடையாளம் கண்டு, இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையினை குறுகிய காலத்தினுள் விநியோகித்து, மக்களின் அன்றாடத் சேவைகளை இலகுவில் பெற்றுக் கொள்வதற்கும், தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் அபிவிருத்தியினை துரிதப்படுத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்துதல் இக் கருத்திட்டத்தன் கீழ் இடம் பெறுகிறது.

 

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையினை விநியோகிப்பதன் தேவைப்பாடு.

 • நவீன தொழில்நுட்பத்தினை உபயோகித்து இலங்கைப் பிரஜைகளின் ஆள் அடையாளத்தை சரியாக உறுதிப்படுத்திக் கொள்ளல்.
 • அரச மற்றும் ஏனைய நிறுவனங்களின் மூலம் வழங்கப்படுகின்ற  சேவைகளை மிக இலகுவாகவும் உடனடியாகவும் பெற்றுக் கொள்ளும் முகமாக தகவல் பரிமாற்றத் தளத்தினை உருவாக்குதல்.
 • நாட்டில் அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தும்போது வினைத்திறனானதும், வெளிப்படையானதுமான உற்பத்தித்திறனுடனான  தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்தல்.

 

 
 
 

 

கருத்திட்டத்தின் நோக்கம்.

 • குடும்ப அலகென்ற வகையில் தனிநபர் தரவுகளை ஒன்றிணைத்து மற்றும் 15 வயது பூர்த்தியடைந்த அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளின் உயிரியல் தரவுகள், உயிரியல் பண்புகள் மற்றும் சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பின் (International Civil Aviation Organization – ICAO) தரத்திற்கமைய பெற்றுக் கொள்ளப்பட்ட புகைப்படம் என்பவற்றினை உள்ளடக்கிய தேசிய பிரஜைகள் தரவுக் கட்டமைப்பினை தேசிய தரவு மையம் ஒன்றாக உருவாக்குதல்.
 • தனி நபரின் ஆள் அடையாளத்தினை சரியாக உறுதிப்படுத்தக் கூடிய தேசிய அடையாள அட்டை ஒன்றினை 15 வயது பூர்த்தியடைந்த அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் விநியோகித்தல்.
 • சட்டபூர்வ தரவுகள் பரிமாற்றல் கொள்கை ஒன்றினை உருவாக்கி அத்தியவசிய நிறுவனங்களுடன் தரவு மையத்தின் தகவல்களைப் பரிமாற்றம் செய்தல்.
 • தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமான திட்டங்களுக்கான வசதிகளை ஏற்படுத்தல்.

 

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை மூலம் மக்கள் அடையும் நன்மைகள்

 • தங்களது ஆள் அடையாளத்தினை மிக இலகுவாக உறுதிப்படுத்திக் கொள்ளக் கூடியமை

அதன்படி இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை ஒன்றினை விநியோகிப்பதன் ஊடாக இந்நாட்டுப் பிரஜைகளின் மனித, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் சட்டபூர்வ உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் தங்களுடைய சேவைகளை நிறைவேற்றும் பொருட்டு ஆள் அடையாளத்தினை சரியான முறையில் உறுதிப்படுத்துவது இவ் அடையாள அட்டை மூலம் மிகவும் சரியான முறையில் இடம்பெறும்.

 • அரசின் மூலம் வழங்கப்படும் சேவைகள் உடனடியாகவும் இலகுவாகவும் பெற்றுக் கொள்வதற்கு உறுதுணையாக அமையும்.

தேர்தல் காலங்களில் வாக்களிப்பதற்கு, வங்கி நடவடிக்கைகள், சாரதி அனுமதிப் பத்திரம், கடவுச் சீட்டு, உள்நாட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கள், ஊழியர் சேமலாப நிதி, காப்புறுதி, காணி மற்றும் சொத்துக்கள், ஓய்வூதியமாகிய சேவைகளைப் பெற்றுக் கொள்கையில் தங்களுடைய ஆள் அடையாளத்தை சரியான முறையில் உறுதிப்படுத்துவதற்கு முடியுமாக இருத்தல். அத்தரவுகளை குறித்த நிறுவனங்களுடன் சட்டபூர்வ தரவு பரிமாற்றல் தளத்தினூடாக இணைப்புச் செய்வதன் மூலம் அடையாள அட்டை இல்லாத பொழுது தங்களுடைய சேவைகளை எவ்வித பாதிப்புமின்றி பெற்றுக் கொள்ள கூடியதாக இருப்பது பிரஜைகளுக்குக் கிடைக்கின்ற  பாரிய நன்மை ஆகும்.

 • உங்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு உதவியாக இருத்தல்.

தனிநபர் ஆள் அடையாளத்தினை சூழ்ச்சியான முறையில் உறுதிப்படுத்தி மேற்கொள்ளப்படும் மேசாடிகள், ஊழல்கள், முறைகேடுகள் ஆகிய சமூக விரோத செயல்களை மிகவும் சூட்சகமான முறையில் கட்டுப்படுத்த முடிவதோடு,வேறு எந்தவொரு நபரிற்கும் உங்களுடைய பெயரில் தோன்றுவதற்கோ அல்லது உங்களது வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போவதனால், சரியான நபரிற்குத் தரமான சேவையினை தடைகளின்றி வினைத்திறனாகப் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் இடர் போன்ற அவசர நிலைமைகளின் போது அடையாள அட்டை இல்லாமல் இருப்பினும் உங்களுடைய ஆள் அடையாளத்தனை உறுதிப்படுத்தக் கூடியதாக இருப்பதன் ஊடாக பிரஜைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

 • உங்களது குடும்ப உறுப்பினர்களின் தரவுகளை உறுதிப்படுத்த வேண்டிய சந்தர்ப்பத்தில் அடையாள அட்டையினை சமர்ப்பிப்பதன் மூலம் அதனை நிறைவேற்ற முடியுமாக இருத்தல்.

உரித்துடைய இலங்கைப் பிரஜைகளின் மற்றும் அந்நபர்களின் குடும்ப உறுப்பினர்களின் தரவுகளை உள்ளடக்கி தேசிய பிரஜைகள் தரவுக் கட்டமைப்பினூடாக இலத்திரனியல் தேசிய தரவு மையம் ஒன்றினை உருவாக்கி தங்கள் குடும்ப உறுப்பினர்களின் தரவுகளை வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனங்களுக்கு மிகவும் நம்பகமான முறையில் உடனடியாக உறுதிப்படுத்த முடியுமாக இருத்தல்.

 • வளமான தேசியத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு வசதிகளை செய்ய முடியுமாயிருத்தல்

தேசிய தனிநபர் தரவு மையத்தினூடாக தேசிய பாதுகாப்பிற்கு மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு ஏதுவாக அமையும் நிறுவனங்களுடன் தரவுப் பரிமாற்றம் செய்யக் கூடியதாக இருப்பதனால் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் மற்றும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியினைத் துரிதப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதன் ஊடாக வளமான தேசியத்தைக் கட்டியெழுப்பக்கூடியதாக இருத்தல்.

மேற்குறிப்பிட்ட அடையாள அட்டை விநியோகிக்கும் பழைய முறைமை மற்றும் இடைக்காலத்தில் இரு மொழிகளில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில் காணப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பலவீனங்களை தவிர்த்துக் கொள்வதற்கு ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களமானது முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.  அதனூடாக மேற்கூறப்பட்ட இரண்டு முறைமைகளிலும் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் பலவீனங்களைத் தவிர்த்து நபர்களை துல்லியமாக அடையாளம் காணக்கூடிய நம்பகத் தன்மையாக ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துகின்ற அடையாள அட்டையினை விநியோகிக்கின்ற சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தல்.

 

 2011.08.17  ஆம் திகதி முதல் 2015.10.07 ஆம் திகதி வரையான கருத்திட்டத்தின் பின்னணி.

 • கருத்திட்ட காலம் – 3 வருடங்கள்
 • கருத்திட்ட மதிப்பீடு – 14.5 பில்லியன் ரூபா
 • கருத்திட்டத்தினை செயல்முறைப்படுத்தல் – ஜனாதிபதி செயல்திட்டக் குழுவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு இணங்க இடம்பெறும். அதன் அங்கத்தவர்கள் கீழ் வருமாறு
 • ஜனாதிபதி செயலாளர் – இணைத் தலைவர்
 • அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் – இணைத் தலைவர்
 • அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அமைச்சின் செயலாளர்
 • திறைசேரியின் பிரதி செயலாளர்
 • ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் நாயகம்
 • பொலிஸ்மா அதிபர்
 • அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர்
 • தகவல் தொடர்பூடக தொழில் நுட்ப பிரதிநிதி நிறுவனப் பணிப்பாளர்.
 • ஜனாதிபதி ஆலோசகர்

 

2015.10.07 ஆம் திகதியின் பின்னரான கருத்திட்டத்தின் சமகால பின்னணி.

 • கருத்திட்ட காலம் – 2 வருடங்கள்
 • கருத்திட்ட மதிப்பீடு – 8.0 பில்லியன் ரூபா
 • கருத்திட்டத்தினை செயல்முறைப்படுத்தல் – கருத்திட்ட செயற்பாட்டுக் குழுவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு இணங்க இடம்பெறும். அதன் அங்கத்தவர்கள் கீழ் வருமாறு
 • உள்நாட்டு அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் – தலைவர்
 • பிரதமரின் செயலாளரின் பிரதிநிதி
 • பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பிரதிநிதி
 • திறைசேரியின் செயலாளர் அல்லது பிரதிநிதி
 • ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் நாயகம்
 • குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்
 • பொலிஸ்மா அதிபர் அல்லது சிரேஷ்ட பிரதி ​ பொலிஸ்மா அதிபர்
 • தகவல் தொடர்பூடக பிரதிநிதி நிறுவனப் பணிப்பாளர்.
 • கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனிப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர்

 

ஆரம்பம் முதல் 2015.10.31 ஆம் திகதி வரை இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக் கருத்திட்டத்தின் அடிப்படை முன்னேற்றம்.

 • தரவுகளைத் திரட்டுவதற்குரிய (Data Capturing) பின்வரும் தொடர்பூடக உபகரணங்களையும் கருவிகளையும் அமைத்து (Information, Education, Communication Material) பிரதேச செயலகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை.
 • பிரஜைகளின் தரவுகள், உயிரியல் பண்புகள் என்பவற்றை திரட்டுதல் தொடர்பாக பொதுமக்களை அறிவுறுத்தும் நிகழ்ச்சித்திட்டம் இடம்பெற்றுள்ளமை.
 • பிரஜைகளின் தரவுகளை ஒன்று திரட்டுவதற்குரிய நபர்களுக்கும் அறிவுறுத்தும் பயிற்சிப்பட்டறை இடம்பெற்றுள்ளமை.
 • பிரஜைகளின் தரவுகள் அவர்களின் உடன்பாட்டிற்கு அமைய திரட்டுவது தொடர்பாக (Manual Data Capturing Programme), முதல் கட்டமாக முன்னோட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்தப்பட்டமை.
 • ஜனாதிபதி செயற்பாட்டுக் குழுவின் அனுமதியுடன் முதற்கட்ட தரவு சேகரிக்கும் முன்னோட்ட நிகழ்ச்சியாக  காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலுள்ள 27 பிரதேச செயலகங்களிலும் 2014 செப்டெம்பர் மாதம் முன்னோட்ட நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
 • இதுவரை அண்ணளவாக 2,50,000 பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் பிரதேச செயலகங்களிலுள்ள திணைக்கள காரியாலயங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
 • தேசிய பிரஜைகள் தரவுக் கட்டமைப்பினை உருவாக்குதல் மற்றும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையினை விநியோகிப்பதற்கு ஏதுவான 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்யும் சட்டத்திற்கு அமைவாக செய்யப்பட்ட திருத்தம் மற்றும் ஒழுங்குவிதிகள் தொடர்பில் பாராளுமன்ற அனுமதியினைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை  விநியோகிப்பதற்கு ஏதுவாக மாகாணக் காரியால/ பிரதேச செயலகங்களில் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பிரிவு/ பிரதான அலுவலகம் மறுசீரமைக்கப்படுதல், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல் மற்றும் அலுவலகப் பணிக்குழுவிற்கு ஆட்சேர்த்துக்கொள்ளல் மற்றும் பயிற்சிகளை வழங்குதல் ஆகிய நடவடிக்களை மேற்கொள்ளப்பட்டமை.