அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்
Hit Counterபார்வையாளர்கள்

ஆட்பதிவூத் திணைக்களம்
புகைப்படப்பிடிப்பகங்களை மீள்பதிவூ செய்வதற்கான படிமுறைகள்

1968இ 32 ஆம் இலக்க ஆட்பதிவூச் சட்டத்தின் நியதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான 2016.02.10 ஆம் திகதிய பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற திருத்தப்பட்ட கட்டளைக்கு அமைய தேசிய அடையாள அட்டைக்காக சர்வதேச சிவில் விமான சேவை ஏற்பாட்டில் International Civil Aviation Organization (ICAO) இன் தரத்திற்கமைய புகைப்படங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

அதற்கமைய ICAO  தரத்தில் புகைப்படங்கள் எடுத்தலுக்காக ஆட்பதிவூத் திணைக்களத்தின் ஊடாக இலங்கையில் உள்ள புகைப்படப்பிடிப்பகங்கள் பதிவூ செய்யப்படுகிறது. அதற்காக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

பொதுவான நிபந்தனைகள்

  1. சகல பதிவூ செய்யப்பட்டுள்ள புகைப்படப்பிடிப்பக உரிமையாளர்களும் புதிய விண்ணப்பப்படிவத்தினை பூரணப்படுத்தி பதிவினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது.
  2. புதிய மென்பொருள் பற்றிய பயிற்சியை வழங்கும் தினத்திலிருந்து ஒரு வருடத்திற்கு (365 நாட்கள்) பதிவூசான்றிதழ் நீடிக்கப்படும். ஆண்டிறுதியில் இருபத்திநான்கு மாதங்களுக்காக (24 மாதங்கள்) பதிவை புதுப்பித்தல்; வேண்டும். மென்பொருளிற்கான காலம் முடிவூப்பெற்றவூடன் மீளவூம் பதிவை புதுப்பிப்பதற்கு மென்பொருள் ஒழுங்கினுhடாக பணிவிடை வழங்கப்படுவதுடன் குறிப்பிட்ட தினத்திலேயே மென்பொருள் சுயாதீனமாக செயலிழந்துவிடும் முறையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  3. அதற்காக பதிவூச் சான்றிதழை புதுப்பிப்பதற்கான கட்டணமாக ரூபா. 2இ000.00 தொகை அறவிடப்படும். தேவையான ஆவணங்களின் சான்றுறுதிப்படுத்தப்பட்ட பிரதி மற்றும் சரியாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பம் என்பன பயிற்சிப்பட்டறைக்கு சமூகமளிக்கும் போது கட்டாயமாக கொண்டுவரவூம்.
  4. புகைப்படப்பிடிப்பக உரிமையாளருக்கு மின்னஞ்சல் முகவரியொன்று (E-mail Address) இருத்தல் வேண்டும்.
  5. புகைப்படப்பிடிப்பகம் கொண்டிருக்க வேண்டிய குறைந்தபட்ச தகைமைகளின் பட்டியலொன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன்  பதில்களை வழங்கும் போது அதன் உதவியை நல்கவூம்.
  6. சரியாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தின் பிரதி (Photocopy) ஒன்றை தங்களிடம் வைத்திருக்கவூம்.
  7. இந்த தரவூகள் அனைத்தும் குறுகிய காலத்தில் ICAO மென்பொருளுடன் தொடர்புபடுத்தப்படுவதுடன் அதன் பின்னர் அந்த தரவூகளை மென்பொருள் முறைமையில் சேர்த்து புதுப்பித்தல்; (Update) நடவடிக்கைகளை செய்யவூம். அதற்கான ஆலோசனைகள் எதிர்காலத்தில் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய விண்ணப்பப்படிவம் கீழ் காணப்படுமாறு அமையூம்.

  விண்ணப்பப்படிவம்   குறைந்தபட்ச தகைமைகள்