2014/09/01 ஆம் திகதியிற்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டைக்கான இணைப்பிரதியினை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் போது கீழ் குறிப்பிடப்படுகின்ற ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஆ.ப.தி/வி/1,7,8 மாதிரிப்படிவத்துடன் கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரினால் உறுதிப்படுத்தப்பட்ட கீழ் குறிப்பிடப்படுகின்ற ஆவணங்களின் போட்டோ பிரதி. (முன்வைக்கப்பட்டுள்ள பிரதிகளினூடாக விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் பிறந்த திகதி உறுதிப்படுத்தப்பட வேண்டும்)
- பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதி
அல்லது
- உத்தேச வயதுச் சான்றிதழுடன் பிறந்த திகதியை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணம் (பிள்ளையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்/ பாடசாலை விடுகைப் பத்திரம்/ தோட்டவிடுகைப் பத்திரம்/ உறுதிப்படுத்தப்பட்ட ஜாதகப் பிரதி/ திருமணப் பதிவுச் சான்றிதழ்/ பிரஜா உரிமைச் சான்றிதழ்/ சத்தியக் கடதாசியின் மூலப் பிரதி)
- பிரஜா உரிமைச் சான்றிதழ் (தொடர்பு படுத்துங்கள்)
40 வயதிற்கு மேலான பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது உத்தேச வயதுச் சான்றிதழ் இல்லாத விண்ணப்பதாரர் தமது பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்துவதற்காக கீழ்வரும் ஆவணங்களை முன்வைக்கவும்
- மேலதிக மாவட்டப் பதிவாளரால் விநியோகிக்கப்பட்ட தேடுதல் விளைவுப் பத்திரம்.
- பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஏற்றுக் கொள்ளக் கூடிய எழுத்து மூல சாட்சி (பிள்ளையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்/ பாடசாலை விடுகைப் பத்திரம்/ தோட்டவிடுகைப் பத்திரம்/ உறுதிப்படுத்தப்பட்ட ஜாதகப் பிரதி/ திருமணப் பதிவுச் சான்றிதழ்/ பிரஜா உரிமைச் சான்றிதழ்/ வயோதிபர் அடையாள அட்டை)
- பெயர், பிறந்த திகதி மற்றும் பிறந்த இடத்தினை உறுதிப்படுதுவதற்காக சத்தியக் கடதாசியின் மூலப் பிரதி. (மாதிரியினைத் தொடர்பு படுத்துங்கள்).
அடையாள அட்டை விநியோகிப்பதற்கு அவசியமான ஏனைய ஆவணங்கள்
- பௌத்த துறவி ஆயின் பௌத்த மத அலுவல்கள் அமைச்சினால் பெற்றுக் கொள்ளப்பட்ட சாமனேரு/ உபசம்பதா சான்றிதழ்.
- ஏனைய மதகுருமார்களுக்காக உரிய திணைக்களம் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட சான்றிதழ்.
- துறவு வாழ்க்கையிலிருந்து மீண்ட பின்னர் அது தொடர்பில் பௌத்த மத அலுவல்கள் திணைக்களத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் சான்றிதழ்
- வாழ்க்கைத் துணையின் பெயரைப் பெற்றுக் கொள்வதற்காக - திருமணப் பதிவுச் சான்றிதழ்
- இலங்கை தாய் அல்லது தந்தைக்கு வெளிநாட்டில் பிறந்த நபர் ஒருவர், குடிவரவு-குயகல்வுத் திணைக்களத்தினூடாக இலங்கைப் பிரஜாவுரிமையினைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் வழங்கப்படும் பிரஜாவுரிமைச் சான்றிதழ். (தொடர்பு படுத்துங்கள்)
- இரட்டைப் பிரஜா உரிமை உள்ள நபர்களாயின் இரட்டைப் பிரஜா உரிமைச் சான்றிதழ்.
- 6 மாத காலத்தினுள் பெற்றுக்கொண்ட ICAO தரத்திலான புகைப்படம்
- விண்ணப்பக் கட்டணம்: 500.00 ரூபா
- குறிக்கப்பட்ட உரிய கால எல்லைக்குள் (தொடர்புபடுத்துங்கள்) பதிவு செய்வதற்கு தவறுகின்ற விண்ணப்பதாரர்கள், கால தாமதத்திற்கான காரணங்களை குறிப்பிட்டு கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக அதனை உறுதிப்படுத்தி ஆணையாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் ஆ.ப.தி/இ/2/3/ii இலக்கம் என்ற
- விண்ணப்பப்படிவங்களை உறுதிப்படுத்தல்:
- கிராம உத்தியோகத்தர் (கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களில் பிரதேச செயலாளர் மேலொப்பமிடுவது கட்டாயமானது).
- பாடசாலை மாணவர்களாயின் பாடசாலை அதிபர்.
- தோட்ட வதிவாளர்களாயின் தோட்ட அதிகாரி.
- விசேட தேவைகள் மற்றும் காரணங்களின் போது ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் நாயகம் மூலம் அதிகாரம் வழங்கப்பட்ட உத்தியோகத்தர்.
அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்வதற்கு அமைவாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை கையளித்தல்.
- சாதாரண சேவை:
- விண்ணப்பப்படிவத்தினை உறுதிப்படுத்திய உத்தியோகத்தருக்கு
- ஒரு நாள் சேவை:
- உரிய உத்தியோகத்தர் உறுதிப்படுத்திய பின்னர் ஆட்பதிவுத் திணைக்கள கொழும்பு பிரதான காரியாலயத்தில் ஒரு நாள் சேவைப் பிரிவிற்கு
|