அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்
Hit Counterபார்வையாளர்கள்
   
 

நடமாடும் சேவை

 அடையாள அட்டை விநியோக நடவடிக்கையினை வினைத்திறனுள்ளதாக மக்களுக்கு மிக சமீபமான சேவையினைப் பெற்றுக் கொடுக்கும் குறிக்கோளுடன் தேசிய அபிவிருத்தியினை நோக்காகக் கொண்டு எமது திணைக்களத்தின் மூலம் நடமாடும் சேவை இடம்பெறுகிறது.

 

நடமாடும் சேவையில் மேற்கொள்ளப்படும் பணிகள்

அடையாள அட்டை விநியோக நடவடிக்கையானது தற்பொழுது கொழும்பில் அமைந்துள்ள திணைக்களத்தில் மாத்திரம் இடம் பெற்று வருகிறது. இருந்த போதும் தூரப் பிரதேசங்களில் இருக்கின்ற மக்களுக்கு வசதிகளை வழங்க வேண்டும் என்ற குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு நடமாடும் சேவை மேற்கொள்ளப்படுகிறது. அங்கு ஒவ்வொரு பிரதேசங்களிலும் உள்ள உரிய விண்ணப்பதாரிகளுக்குமான அடையாள அட்டைக்குரிய விண்ணப்பப்படிவங்களை கையேற்பதுடன் கிராம உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர் மற்றும் ஆட்பதிவுத் திணைக்கள உத்தியோகத்தர்களும் நடமாடும் சேவையில் கலந்து விண்ணப்பப்படிவங்களைப் பரிசீலித்து குறைபாடுகளின்றி அவற்றை கையேற்பார்கள். அத்தோடு அவ்விண்ணப்பப்படிவங்களுக்கான அடையாள அட்டைகளை குறுகிய காலத்திற்குள் செய்து முடித்து விண்ணப்பதாரிகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

 

 நடமாடும் சேவைகள் பிரதானமாக பின்வருமாறு இடம்பெறும்.

  • பிரதேச செயலகங்கள் மூலமாக இடம் பெறும் நடமாடும் சேவை.
  • அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் வேண்டுகோளின்பேரில் அந்நிறுவனங்களில் பணி புரிகின்ற  உத்தியோகத்தர்களுக்காக அந்நிறுவன வளாகத்தில் இடம் பெறும் நடமாடும் சேவை.

 

குறிக்கோள்

  • அடையாள அட்டையினைப் பெற்றுக்கொள்வது பற்றிய அக்கறையற்றவர்களுக்கு  ஆர்வமூட்டுதல்.
  • சிற்சில ஆவணங்களிலுள்ள குறைபாடுகளின் நிமித்தம் அடையாள அட்டையினை பெறுவதில் சிக்கல் நிலையில் உள்ளவர்களுக்கு அறிவுறுத்தி குறைந்த பட்ச ஆவணங்களை உரிய முறையில் உறுதிப்படுத்திக் கொண்டு விரைவில் அடையாள அட்டைகளை விநியோகித்தல்

 

 
   
   
 

 

 

திணைக்களத்தின் மூலம் இடம் பெறும் நடமாடும் சேவை ஊடாக மக்கள் வசதியான முறையில் சேவையினைப் பெற்று அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்ள  முடியும். இங்கு ஆட்பதிவுத் திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர், கிராம அலுவலர்கள், மேலதிக மாவட்டப் பதிவாளர், சமாதான நீதவான், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தபால் சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் அடையாள அட்டை தொடர்பிலான செயல் முறையில் பங்கு கொள்ளும் சகல அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள்  ஓரிடத்தில் இணைந்து அடையாள அட்டை தொடர்பில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்து கொண்டு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு வசதிகளை செய்து கொடுத்தல். நடமாடும் சேவையினை நடாத்த வேண்டும் எனில் எழுத்து மூலமான வேண்டுகோளின் மூலம் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அது தொடர்பிலான மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள 0112555615 என்ற தொலைபேசி  இலக்கத்தினூடாக உதவி ஆணையாளரை (இயக்கம்) தொடர்பு கொள்ளவும்.