உள்ளகஅலுவல்கள் பிரிவு


ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்ட 2025பெப்ரவரி 18 ஆம் திகதிய PS/SB/சுற்றறிக்கை/2/2025 இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம் ஆட்களைப் பதிவுசெய்யும்திணைக்களத்தின் உள்ளகஅலுவல்கள் பிரிவு நிறுவப்பட்டது.

முறைப்பாடுகளைச் சமர்ப்பித்தல்

ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தில் பணியாற்றும் அலுவலர்கள் தொடர்பாக அல்லது ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக அல்லது அதன் சேவைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளைபின்வரும் முறைகள் மூலம் உள்ளகஅலுவல்கள் பிரிவுக்கு சமர்ப்பிக்கப்படல்வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: iau_unit@drp.lk
அஞ்சல் முகவரி :- ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களம் 10 ஆவது மாடி, சுஹுருபாய, ஸ்ரீ சுபூதிபுர வீதி, பத்தரமுல்லை.

உள்ளகஅலுவல்கள் பிரிவின் பிரதான நோக்கங்கள்

  1. நிறுவனத்தினுள் ஊழலைத் தடுத்தல் மற்றும் நிறுவனத்திற்குள் நேர்மையான கலாச்சாரத்தை விருத்திசெய்தல்.
  2. நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் மற்றும் நிறுவன நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அணுகுவதை உறுதி செய்தல்.
  3. நிறுவனத்திற்குள் நெறிமுறை சார்ந்த நிர்வாகத்தை ஊக்குவித்தல்.
  4. துர்நடத்தைகள் தொடர்பில்முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கு ஊக்கமளித்தல்,தகவல் தெரிவிப்பவர்களைப் பாதுகாத்தல் மற்றும்இரகசியத்தன்மையைப் பேணுவதற்குபாதுகாப்பான மற்றும் அணுகக்கூடிய அமைப்பை உருவாக்குதல்.
  5. சட்ட அமலாக்கல் நிறுவனங்கள் மற்றும்இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களை புலனாய்வுசெய்யும் ஆணைக்குழுவுடன் இணைந்து சட்டங்களை அமல்படுத்துவதில் பணியாற்றுதல்.

உள்ளகஅலுவல்கள் பிரிவின் கட்டமைப்பு

பிரிவின் பதவி பெயர் நிரந்தரப் பதவி
1. பிரிவுத் தலைவர் திருமதி. கே.எச்.ஜே.எல். சேனாரத்ன மேலதிக ஆணையாளார் நாயகம்
2. நம்பிக்கைமிக்க அதிகாரி திருமதி. எஸ்.ஏ.எரந்திகா டபிள்யூ. குலரத்ன ஆணையாளர் (அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி)
3. உறுப்பினர் திருமதி. ஆர்.எம்.எம்.ஆர்.ரத்நாயக்க முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்
4. உறுப்பினர் திருமதி. பி.பி. வருணி சமந்தா முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்
5. உறுப்பினர் திரு. ஏ.ஏ.சி.என்.பண்டார முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்
6. உறுப்பினர் திரு. பி.எல்.எம். புத்பிட்டிய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்
7. உறுப்பினர் திரு. ஏ.டபிள்யூ.எம். வாரிஸ் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்
8. உறுப்பினர் திரு. கே.ஜி.ஆர்.பி. செனவிரத்ன முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்
9. உறுப்பினர் திரு. ஆர்.ஜே.எச். விஜேவர்தன முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்
10. உறுப்பினர் திருமதி. இ.எம். படகம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்
11. உறுப்பினர் திரு. எம்.கே. கமகே அபிவிருத்தி உத்தியோகத்தர்
12. உறுப்பினர் திரு. பி.ஏ.டி. சமீரா அபிவிருத்தி உத்தியோகத்தர்
13. உறுப்பினர் திருமதி. டி.என்.யு. விக்ரமசிங்க அபிவிருத்தி உத்தியோகத்தர்
14. உறுப்பினர் திரு. ஆர்.ஏ.டி. ஒமேஷ் அபிவிருத்தி உத்தியோகத்தர்
15. உறுப்பினர் திரு. எச்.ஏ. ரெஷான் பெரேரா அபிவிருத்தி உத்தியோகத்தர்
16. உறுப்பினர் திருமதி. எஸ்.டி. உக்ககும்புர அபிவிருத்தி உத்தியோகத்தர்
17. உறுப்பினர் திரு. ஒய்.எம்.டி.டி.யாபா அபிவிருத்தி உத்தியோகத்தர்


உள்ளகஅலுவல்கப் பிரிவின் பொறுப்புகள் மற்றும் செயற்பாடுகள்

  1. நிறுவனத்திற்குள் காணப்படும் முறைமை இடையூறுகளை (systemic bottlenecks)அடையாளம் காண தற்போதைய நடைமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளை மீளாய்வு செய்தல் மற்றும் செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிக்க அவற்றை எளிதாக்குதல்.
  2. நிறுவனத்திற்குள் ஊழல் மற்றும் நெறிமுறையற்ற நடத்தைக்கு ஆளாகக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து, ஊழல் அபாய மதிப்பீடுகளை (Corruption Risk Assessment)மேற்கொள்வதன் மூலம் அவ்றைதடுக்க நடவடிக்கைகளை எடுத்தல்
  3. நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளகுறிப்பிட்ட ஊழல் எதிர்ப்பு நோக்கங்கள் மற்றும் மூலோபாயங்களை உள்ளடக்கிய ஒரு நிறுவன இணக்க செயல் திட்டத்தை உருவாக்கி செயற்படுத்தல்.
  4. தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் மற்றும் தேசிய ஊழல் எதிர்ப்பு மூலோபாயங்களுடன் நிறுவனக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை ஒருங்கிணைத்தல்..
  5. 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டம் உட்பட தேசிய மற்றும் சர்வதேச ஊழல் எதிர்ப்புச் சட்டங்களுடன் நிறுவனத்தின் இணக்கத்தை மதிப்பிடுவதற்குஇணக்க மதிப்பீடுகளை (Compliance Assessments)மேற்கொள்ளல் மற்றும்விருத்தி செய்யப்பட்ட வேண்டிய பகுதிகளை அடையாளம் காணல்.
  6. அனைத்து அரசாங்கஅலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சொத்துக்கள் பற்றிய பிரகடனம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றியசார்த்துதல்களை புலனாய்வுசெய்யும் ஆணைக்குழுவின் கட்டளைகள் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி நலன் மோதல்களை முகாமை செய்தல்
  7. நிறுவனத்திற்குள் ஊழல் மற்றும் நெறிமுறையற்ற நடத்தை தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்கும் முகாமை செய்வதற்கும் ஒரு பாதுகாப்பான அமைப்பை நிறுவுதல்.இதுபோன்ற அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும்உரியஅலுவலர்கள் அல்லது பிரிவுகளால் உடனடியாகக் கையாளப்படுவதை உறுதிசெய்து, விசாரணைகளை மேற்கொள்ளும் தொடர்புடைய பங்குதாரர்களுக்கு வழக்கமான புதுப்பிப்புகளை வழங்குவதன் மூலம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல். தேவைக்கேற்ப, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கண்டறியப்படும் தகவல்களைவிசாரணைக்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வுசெய்யும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தல்
  8. நிறுவனங்களினால் வழங்கப்படும்சேவைகளை விபரிக்கும் பிரஜைகள் பட்டயத்தை தயாரித்துவெளியிடுதல்.
  9. அரசாங்க அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய தரப்படுத்தப்பட்ட நெறிமுறைக் கோவை உட்பட, நெறிமுறை சேவை சூழலை ஊக்குவிக்கும் கொள்கைகளை நிறுவி செயற்படுத்தல்.
  10. ஊழல் எதிர்ப்பு கொள்கைகளுக்கு ஊழியர்கள் உறுதியுடன் இருப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு உள்ளிட்ட பிற நடவடிக்கைகளை எடுத்தல்.
  11. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வுசெய்யும் ஆணைக்குழு மற்றும்தேசிய ஊழல் எதிர்ப்பு சட்டகத்தின் மூலம் வழிநடாத்தப்படும் நேர்மை மதிப்பீட்டு செயன்முறைக்கு நிறுவனம் பங்கேற்கின்றது மற்றும் ஒத்துப்போகின்றது என்பதை உறுதி செய்து தேசிய ஊழல் எதிர்ப்பு நேர்மை மதிப்பீட்டுக்கு (National Anti-Corruption Integrity Assessment) நிறுவன மையமாக செயற்படுதல்.
  12. கடமைகளை நிறைவேற்றுவதில் தொடர்ச்சியான வழிகாட்டுதல் மற்றும் ஒத்துழைப்பை பெறுவதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வுசெய்யும் ஆணைக்குழுவுடன் தொடர்பைப் பேணுதல்
  13. உள்ளகஅலுவல்கள் பிரிவின் செயற்பாடுகள், ஊழல் எதிர்ப்பு முயற்சிகளின் முன்னேற்றம், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை சாராம்சப்படுத்திகாலமுறைக்கு ஏற்ப வருடாந்த அறிக்கைகளைத் தயாரித்தல்.
  14. தனியார் துறை பங்குதாரர்களின் பங்கேற்புடன் நேர்மையைவிருத்தி செய்வதற்கான திட்டங்களை வகுத்து செயற்படுத்தல்