நோக்கு

அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் உறுதிப்படுத்தப்பட்ட அடையாளம்

பணிக்கூற்று

உள் நாட்டில் சகல இலங்கை பிரஜைகளின் மனித, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் சட்ட பூர்வமானஉரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், நாட்டைவிட்டு வெளியேறிய சந்தர்ப்பத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையிலும், அவர்களின் தகவல்களை உள்ளடக்கி தேசிய பிரஜைகள் தரவுத் தளத்தை அமைத்தல், யாராவது ஒரு பிரஜையின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பத்தில் அரச மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு தகவல்களை பெற்றுக்கொடுத்தல் மற்றும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு ஒத்துழைப்பு நல்குதல்.

பொறுப்புக்கள்

  • அனைத்து இலங்கைப் பிரஜைகளினதும் தனிநபர் தகவல்களை ஒன்று சேர்த்து தேசிய தனிநபர் தரவுத்தளத்தை இலத்திரனியல் தரவு மையமாக அமைத்து அதனை முன்னெடுத்தல்.
  • உரிய வயது பூர்த்தியடைந்த அனைத்து இலங்கைப் பிரஜைகளையும் பதிவு செய்து தேசிய அடையாள அட்டையினை வநியோகித்தல்.
  • இலங்கைப் பிரஜைகளின் தனிநபர் தகவல்களை உறுதிப்படுத்தி சான்றுப்படுத்தல்.
  • அரச மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் தகவல்கள் மற்றும் அறிவினைப் பரிமாற்றிக் கொள்ளல்.
  • நவீன தொழில் நுட்ப அறிவு மற்றும் மனிதவள அபிவிருத்தி மூலம் திணைக்களத் திறனைக் கட்டியெழுப்புதல்.
  • தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வசதிகளை ஏற்படுத்துதல்.

பிரதான செயற்பாடுகள்

  • அனைத்து இலங்கைப் பிரஜைகளினதும் தனிநபர் தகவல்களை ஒன்று சேர்த்து தேசிய தனிநபர் தரவுத்தளத்தை இலத்திரனியல் தரவு மையமாக அமைத்து அதனை பராமரித்தல்.
  • தகுதியுடைய அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் நம்பகத் தன்மையான முறையில் அடையாளப்படுத்திக் கொள்வதற்காக தேசிய அடையாள அட்டையினை விநியோகித்தல்.
  • தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்திச் செயற்பாட்டிற்கு வசதிகளை ஏற்படுத்துதல், சட்டம் மற்றும் கொள்கைகளுக்கமைய தரவுகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் தரவுகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தல்.

குறிக்கோள்கள்

அனைத்து இலங்கைப் பிரஜைகளினதும் தரவுகளை இலத்திரனியல் தேசிய தரவு மையத்தில், தேசிய தனிநபர் பெயர் பட்டியலாகத் தயாரித்து, உரித்துடைய பிரஜைகளை அடையாளப்படுத்தி இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையினை விநியோகிப்பதுடன், சட்டபூர்வ தரவுப் பரிமாற்றத் தளத்தினூடாக ஏனைய நிறுவனங்களோடு தரவுகளைப் பரிமாற்றம் செய்து, தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு நல்குதல்.