ஆட்களை பதிவு செய்யும் திணைகளத்தின் மூலம் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையின் தகவல்களை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து வழங்குமாறு தேசிய அடையாள அட்டையின் உரிமையாளர் கோருமிடத்து, தேசிய அடையாள அட்டையின் தகவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்.

    தேசிய அடையாள அட்டை (தெளிவான, சேதமடையாத தேசிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.)
    தேசிய அடையாள அட்டையிலுள்ள தகவல்கள் பூரணபடுத்தப்பட்ட படிவம்
    தேசிய அடையாள அட்டையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க உங்களால் ஆட்பதிவு திணைக்கள சிரப் கருமபீடத்தில் ரூ.2000.00 செலுத்தி பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் பிரதான காரியாலயத்தின் 9ம் மாடி B பிரிவில் தேசிய அடையாள அட்டையை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்துக்கொள்ள முடியும். மேலும் அதற்கு தேசிய அடையாள அட்டையின் உரிமையாளர் சமூகமளிக்க வேண்டும் என்பதோடு ஏதேனும் விசேட காரணத்தினால் சமூகமளிக்க முடியாமல் இருப்பின் தாய், தந்தை, கணவன், மனைவி, உடன் பிறந்தவர்கள் மற்றும் சட்டபூர்வ பாதுகாவலர்கள் விண்ணப்பதாரியின் அனுமதியளிக்கப்பட்ட கடிதத்தை சமர்பிப்பதன் மூலம் ஆங்கில மொழிபெயர்ப்பை பெற்றுக்கொள்ள முடியும்.


எந்தவொரு நிறுவனத்தினாலோ, திணைக்களத்தினாலோ விசேட கோரிக்கை விடுக்கப்பட்டாலோ அல்லது பிரதேச செயலகங்களால் ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டாலோ நடமாடும் சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்து தரப்படும்.


தேசிய அடையாள அட்டையின் தகவல்களின் உண்மை தன்மையை சான்றுறுதிப்படுத்தல் 2016ம் ஆண்டு 8ம் இலக்கமுடைய ஆட்களை பதிவு செய்யும் (திருத்தம்) சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட 1968ம் ஆண்டு 32ம் இலக்கமுடைய ஆட்களை பதிவு செய்யும் சட்டத்தில் 39ம் பிரிவின் ஊடாக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்திற்கு அதிகாரம் ஒப்படைக்கப்ட்டுள்ளது. இந்த சேவையை பெற்றுக்கொள்வதற்காக ஆட்களை பதிவு செய்யும் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அதற்கமைய, கணனிமயப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையின் தகவல்கள் குறித்த நபரின் விருப்பத்தோடு திணைக்களத்துடன் ஒப்பந்தமான அதிகாரிகளுக்கு நிகழ்நிலை முறைமை ஊடாக வழங்கப்படும். இதன்போது தகவல்களை சான்றுறுதிப்படுத்தலுடன் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய ஏதேனும் நிறுவனத்திடம் இருந்து பெற வேண்டிய கட்டணம் அடங்கிய பற்றுச்சீட்டு(Invoice) திணைக்களத்தினால் மாதாந்தம் குறித்த நிறுவனத்திற்கு விநியோகிக்கப்படும்.

ஒரு நபர் தமது சேவைகளை நிறைவேற்றும் போது, அந்த நபரின் தேசிய அடையாள அட்டையின் தகவல் தரவு அமைப்பில் இல்லை என்று ஒரு நிதி நிறுவனம் அல்லது பிற நிறுவனம் தெரிவிக்கும் போது, அது தொடர்பான தகவலை திணைக்களத்திடம் கோரலாம்.

குறித்த நபருக்கு வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையின் தகவல்களை சரிப்பார்க்க தொடர்புடைய நபரின் தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்பு சான்றிதழ் திணைக்களத்தின் இலக்கக் கிளைக்கு அல்லது பிரதேச செயலகத்தின் தேசிய அடையாள அட்டை பிரிவுக்கு வழங்கப்பட வேண்டும். இதனூடாக தேசிய அடையாள அட்டையின் தகவல்கள் கணனி வலையப்பிற்குள் உள்ளடக்கப்படுகிறது.

விசாரணைகள்
கிளை தலைவர் - இலக்க கிளை
தொலைப்பேசி இலக்கம் : 011 52261624
மின்னஞ்சல் : hob.ccu@drp.lk


இலங்கைப் பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டையை வழங்கும் செயல் முறையில் ஒருவர் தமது கையிலுள்ள தேசிய அடையாள அட்டையில் திருத்தை மேற்கொள்வதற்காகவோ அல்லது காணாமற் போன தேசிய அடையாள அட்டையின் பிரதியை பெற்றுகொள்வதற்காகவோ அல்லது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி பிற சேவைகளை பெற்றுக்கொள்வதற்காகவோ எத்தனிக்கும் போது பின்வரும் சிக்கல்கள் கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட விண்ணப்பங்கள் உடனடியாகக் கையாளப்பட்டு சீர் செய்யப்படும்.

     ஒரே தேசிய அடையாள அட்டை இலக்கம் இரண்டு நபர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருத்தல்.
     திணைக்களத்தின் தவறு காரணமாக பிறந்த தேதி அல்லது பாலினத்துடன் பொருந்தாத எண்ணுடன் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை தேசிய அடையாள அட்டை இலக்கம் விநியோகிக்கப்பட்டிருத்தல்.
     தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை சரிபார்க்க விண்ணப்பதாரருக்கு நிதி நிறுவனம் அல்லது வேறு நிறுவனத்தினால் பணிக்கப்பட்டிருப்பின்,
      இறந்த நபர்களின் தேசிய அடையாள அட்டை இலக்க உறுதிப்படுத்தல் தேவைப்படும் பட்சத்தில் தொடர்புடைய இலக்க உறுதிப்படுத்தல் கடிதம் திணைக்களத்தின் இலக்க கிளையினூடாக வழங்கப்படும். (விண்ணப்பத்தை பதிவிறக்கவும்.)

தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுதிப்படுத்தல் கடிதத்தைப் பெற சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

     திணைக்களத்திடமிருந்து இலக்கத்தை உறுதிப்படுத்தல் கடிதத்திற்கான தொடர்புடைய நபரின் கோரிக்கை.
     இறுதியாக வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை
     பிறப்புச்சான்றிதழ்
     இறுதியாக வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை இலக்கம் குறிப்பிடப்பட்டு பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டு, வங்கிப்புத்தகம், சாரதி அனுமதிப்பத்திரம், ஊழியர் சேமலாப நிதி தரவுகள், போன்ற ஏனைய எழுத்துமூல ஆவணங்கள்
     இரட்டை குடியுரிமை சான்றிதழ். (சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டும்)
     குறித்த நபரின் மரணத்திற்கு பின் உறவினர்களால் கோரிக்கை மேற்கொள்ளப்படும் போது இறந்த நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுதிப்படுத்தல் அறிவுறுத்தல் தாளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்கள் மற்றும் பதிவுகள்.

குறிப்பு:

  1. இறுதியாக வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியமாகும். மேலும் தேசிய அடையாள அட்டை காணாமற்போயிருந்தாலோ, சேதமடைந்திருந்தாலோ, அல்லது தகவல்கள் தெளிவில்லாமல் இருந்தாலோ தேசிய அடையாள அட்டையின் தெளிவான பிரதினை பெற்ற பிறகே அடையாள இலக்க உறுதிப்படுத்தல் கடிதங்களை பெறுவதற்கு கோரிக்கை விடுக்க முடியும்.
  2. தனி நபரின் கோரிக்கையின் பேரில் வெளிநாட்டு தூதரகங்களுக்கு தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுதிப்படுத்தும் கடிதம் வழங்கும் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுடனான உடன்படிக்கையின் படி மும்மொழியிலும் வழங்க வேண்டும் என்பதால் தற்போது விநியோகிக்கப்படும் ஸ்மார்ட் அட்டையைப் பெற்றிருக்க வேண்டும்.
  3. மேலும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுதிப்படுத்தும் கடிதத்தினை தேசிய அடையாள அட்டையின் உரிமையாளரினாலும் , மரணித்த நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுதிப்படுத்துவதாயின் மரணித்த நபரின் அடுத்த உறவினர் இலக்க உறுதிப்படுத்தல் கடிதத்தைப்பெற கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். எனினும் இயலாமை/ நோய் போன்ற ஏதேனும் சிறப்பு காரணங்களினால் சமூகமளிக்க முடியாமல் இருப்பின் கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன் அதிகாரமளிக்கப்பட்ட நபர் வருகை தர முடியும்.
  4. இறந்த நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு கட்டணமாக ரூ.500.00 அரசிற்கு செலுத்தப்பட வேண்டும்.

இறந்த நபர்களின் தேசிய அடையாள அட்டைகளை ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தில் அல்லது பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இறந்தவர்களின் தேசிய அடையாள அட்டைகள் தொடர்பாக 2017ம் ஆண்டின் 16ம் இலக்க ஆட்களை பதிவு செய்யும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டடுள்ளது.
இறந்த நபர்களின் தேசிய அடையாள அட்டைகள் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தில் அல்லது பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இறந்தவர்களின் தேசிய அடையாள அட்டைகளை திணைக்களத்திற்கு கையளித்தல்.


இறந்த நபர்களின் தேசிய அடையாள அட்டைகளை திணைக்களத்தின் பிரதான அலுவகத்தின் இயக்க கிளையில் கையளிக்கும் போது பின்வரும் ஆவணங்கள் தேவைப்படுகின்றன.

,
    இறந்தவரின் தேசிய அடையாள அட்டை 3 நகல்களுடன்
    இறப்பு சான்றிதழின் சான்றுறுதிப்படுத்தப்பட்ட நகல்
    பூரணப்படுத்தப்பட்ட ஆ.ப.தி./இ/01/3 படிவங்கள் 03. (படிவத்தை பதிவிறக்கவும்.)

இறந்தவர்களின் தேசிய அடையாள அட்டைகளை பிரதேச செயலகத்தில் கையளித்தல்.

இறந்தவர்களின் தேசிய அடையாள அட்டைகளை பிரதேச செயலகத்தில் கையளித்தல்.

    இறந்தவரின் தேசிய அடையாள அட்டை
    இறந்தவரின் உறவினரிடம் இருந்து பெறப்பட்ட இணைப்பு படிவம் 01. (படிவத்தை பதிவிறக்கவும்.)
    மேலே இல 02 இல் குறிப்பிடப்பட்ட படிவம் இறப்பு பதிவாளரால் சான்றளிக்கப்பட்டு, பின் கிராம கிராம அலுவலரால் சான்றுறுதியளிக்கப்பட வேண்டும்

தேசிய அடையாள அட்டை காணாமற் போன சந்தர்ப்பங்களில் அதன்படி,
    பொலிஸ் அறிக்கை
    இறந்தவரின் உறவினரிடமிருந்து பெறப்பட்ட இணைப்பு படிவம் 02. (படிவத்தை பதிவிறக்கவும்.)
    இறப்பு பதிவாளரால் சான்றளிக்கப்பட்டு, பின் கிராம அலுவலரிடம் குறித்த படிவம் ஒப்படைக்கப்பட்டு கிராம அலுவலரால் சான்றுறுதியளிக்கப்பட வேண்டும்.


இறந்தவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுதிப்படுத்தும் அவசியம் தேவைப்படும் பட்சத்தில், ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் இலக்க கிளையின் ஊடாக தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதத்தை வழங்குகிறது.


வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் தொடர்பான புகார்கள் அல்லது நிகழ்நிலை அமைப்புக்குள் உள்ளிடப்பட்ட விண்ணப்பங்களில் ஏதேனும் பிரச்சனைகள் (பிறந்த திகதியில் மாற்றம் ஏற்பட்டு இருப்பின், வெவ்வேறு பிறந்த திகதிகள் மற்றும் பிறப்பு சான்றிதழ் இருப்பின், வெவ்வேறு பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பின், தேசிய அடையாள அட்டைகள் சிதைக்கப்பட்டிருப்பின்) காணப்படும் பட்சத்தில் முறையான விசாரணை நடத்தப்பட்டு, அது தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும்.


தற்போது திணைக்களத்தின் தரவு ஒழுங்கமைப்பு இலங்கை பொலிஸுடன் தொடர்புபடுத்தப்பட்டிருப்பதால் பொலிஸ் தடையகற்றல் இலங்கை காவல்த்துறையால் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பிரச்சனைகள் உடனான விண்ணப்பபடிவங்கள் திணைக்களத்திற்கு அனுப்பி பிரச்சனைக்கான தீர்வுக்கு பின்னர் தடையகற்றல் மேற்கொள்ளப்படும்.