முதன்முறையாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளுதல்

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதி.

இலங்கைப் பிரஜையாக இருக்கும் 15 வயதை எட்டிய அல்லது அடையும் ஒவ்வொரு நபரும் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை சமர்ப்பித்தல்.

விண்ணப்பதாரர் விண்ணப்பத்தை சான்றுறுதிப்படுத்தும் உத்தியோகத்தர்
1 பாடசாலை விண்ணப்பதாரர்கள், அதிபர் அல்லது பிரிவெனாதிபதி
2 மேற்கண்ட அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள், வசிக்கும் பகுதியின் கிராம அலுவலர் (பிரதேச செயலாளரின் மேலொப்பம் கட்டாயம்)
3 மேற்கூறிய அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்த தோட்ட குடியிருப்பாளர்கள், தோட்ட அதிகாரி
தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் மேற்கூறியவாறு சான்றளிக்கும் அலுவலரினால் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

கட்டணம் / தண்டப்பணம் அறவிடுதல்

1 முதற் தடவையாக தேசிய அடையாள அட்டை விநியோகிப்பதற்கான கட்டணம் (புதிய கட்டண அறவீடு தொடர்பான அறிவித்தல்) ரூ. 200.00
2 சாதாரண சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் தேசிய அடையாள அட்டையை அனுப்புவதற்கான கட்டணம் ரூ. 120.00
3 15 வயதை எட்டிய நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத விண்ணப்பதாரருக்கான தண்டப்பணம் ரூ. 2500.00
4 குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 19(2) இன் கீழ், இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 06 மாதங்களுக்குள் தேசிய அடையாள அட்டையைப் பெறாத விண்ணப்பதாரருக்கு தண்டப்பணம் ரூ. 2500.00

மேற்படி கட்டணத்தை, விண்ணப்பத்தை சான்றுறுதிப்படுத்தும் சான்றளிக்கும் உத்தியோகத்தர்களினூடாக செலுத்த முடியும் எனவும், தண்டப்பணம் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தின் காசாளரிடம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  1. சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (ஆ.ப.தி./வி/1,7,8 விண்ணப்பப் படிவம்)
  2. மேலதிக மாவட்டப் பதிவாளரால் சான்றளிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் அல்லது பிறப்புப் பதிவேட்டில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட குறிப்பு
  3. 06 மாத காலத்திற்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட ICAO தரமுடைய புகைப்படம் (இணைப்பு)
  4. விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு
  1. பிறப்புச் சான்றிதழ் இல்லையாயின் உத்தேச வயதுச் சான்றிதழ் அல்லது பதிவுப் புத்தகத் தேடுதல் விளைவு குறிப்புடன் சான்றிதழுடன் பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிபடுத்தக்கூடிய ஆவணம் (பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் / பாடசாலை விடுகைப் பத்திரம் / தோட்ட விடுகைப் பத்திரம் / விண்ணப்பதாரரின் சான்றுப்படுத்தப்பட்ட ஜாதகக்குறிப்பு பிரதி / விண்ணப்பதாரரின் விவாகச் சான்றிதழ் / விண்ணப்பதாரரின் குடியுரிமைச் சான்றிதழ் / விண்ணப்பதாரரின் பிறந்த திகதி அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணம்)
  2. வெளிநாட்டில் பிறந்த நபர் ஒருவரின் பெற்றோர் இலங்கை பிரஜையாக இருப்பின் இலங்கை குடியுரிமை பெற்றுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்படும் குடியுரிமைச் சான்றிதழ். (குடியுரிமைச் சான்றிதழின் மாதிரி இணைப்பு)
  3. இரட்டை குடியுரிமை பெற்ற நபராயின் இரட்டை குடியுரிமை சான்றிதழ் (இரட்டை குடியுரிமைச் சான்றிதழின் இணைப்பு மாதிரி).
  4. மதகுருமார்களுக்காக பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  5. பௌத்த துறவியின் பெயரானால், பௌத்த மத அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சாமனேர சான்றிதழ் அல்லது உபசம்பதா சான்றிதழ்
    ஏனைய மத குருமார்களின் குருத்துவத்தை / புரோகித்தை உறுதிபடுத்தி உரிய திணைக்களங்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ்
    துறவு வாழ்க்கையிலிருந்து மீண்ட பின்னர் அது தொடர்பில் உறுதிப்படுத்தி உரிய திணைக்களங்களின் மூலம் வழங்கப்பட்ட சான்றிதழ்
  6. குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவுக்கு விண்ணப்பிக்காத விண்ணப்பதாரியாயின்
  7. முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (ஆ/ப/தி/இ/02/03/படிவம்)
    பரிந்துரைக்கப்பட்ட தண்டப்பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு (இணைப்பு)
  8. கணவர் பெயர் அல்லது குடும்பப்பெயருக்கு விண்ணப்பித்தால், மேலதிக மாவட்ட பதிவாளர் மூலம் சான்றுப்படுத்தப்பட்ட விவாகச் சான்றிதழ்

தேசிய அடையாள அட்டைகளை வழங்குதல்

சாதாரண சேவை அதிபர் அல்லது பிரிவெனாதிபதி மூலம் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் திணைக்களத்திற்கு அல்லது உரிய மாகாண காரியாலயங்களுக்கு அனுப்பப்பட்ட பின்னர், தேசிய அடையாள அட்டை விண்ணப்பதாரிக்கு தபால் மூலம் விநியோகிக்கப்படும்.
கிராம அலுவலரால் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் அந்தந்த பிரதேச செயலகங்களின் அடையாள அட்டை பிரிவு மூலம் விண்ணப்பம் மற்றும் உரிய ஆவணங்களை திணைக்கள கணினி அமைப்பிற்கு சமர்ப்பித்த பின்னர் விண்ணப்பதாரருக்கு தபால் மூலம் விநியோகிக்கப்படும்.
ஒருநாள் சேவை ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பத்தரமுல்லை தலைமை அலுவலகம் அல்லது காலி மாகாண காரியாலயத்திற்குச் சென்று சேவையைப் பெறலாம்.
ஒரு நாள் சேவை பற்றிய கூடுதல் தகவலுக்கு
தொலைந்து போன தேசிய அடையாள அட்டைக்கு புதிய தேசிய அடையாள அட்டையைப் பெறுதல்

தேசிய அடையாள அட்டையை இழந்த ஒருவர் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, தொலைந்து போன தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக புதிய தேசிய அடையாள அட்டைக்கு உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை சமர்ப்பித்தல்.

விண்ணப்பதாரி விண்ணப்பத்தை சான்றுறுதிப்படுத்தும் உத்தியோகத்தர்
1 தேசிய அடையாள அட்டை தொலைந்து போன தோட்ட குடியிருப்பாளர் தோட்ட அதிகாரி
2 தேசிய அடையாள அட்டை தொலைந்து போன தோட்ட குடியிருப்பாளர் அல்லாத எந்தவொரு விண்ணப்பதாரரும், கிராம அலுவலரால் (பிரதேச செயலாளரின் மேலொப்பம் கட்டாயம்)
ஒவ்வொரு விண்ணப்பதாரரும் சம்பந்தப்பட்ட சான்றுறுதிப்படுத்தும் அலுவலர் மூலம் விண்ணப்பப்படிவத்தை அனுப்புவது கட்டாயமாகும்.

கட்டண அறவீடு

1 தொலைந்து போன தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக புதிய தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான கட்டணம் (புதிய கட்டணம் அறவிடுவதற்கான அறிவிப்பு). இணைப்பு ரூ.1000.00
2 சாதாரண சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் தேசிய அடையாள அட்டையை அனுப்புவதற்கான கட்டணம் ரூ.120.00

மேற்கூறிய கட்டணங்களை விண்ணப்பத்தை சான்றுறுதிப்படுத்தும் சான்றளிக்கும் உத்தியோகத்தர்கள் மூலம் செலுத்த முடியும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  1. சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் (ஆ.ப.தி./வி/1,7,8 விண்ணப்பப்படிவம்)
  2. பொலிஸ் முறைப்பாட்டு அறிக்கையின் மூலப்பிரதி
  3. மேலதிக மாவட்டப் பதிவாளரால் சான்றளிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் அல்லது பிறப்புப் பதிவேட்டில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட குறிப்பு
  4. 06 மாத காலத்திற்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட ICAO தரமுடைய புகைப்படம் (இணைப்பு)
  5. விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு

  1. பிறப்புச் சான்றிதழ் இல்லையாயின் உத்தேச வயது சான்றிதழுடன் பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிபடுத்தக்கூடிய ஆவணம் (பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் / விண்ணப்பதாரரின் பாடசாலை விடுகைப் பத்திரம் / விண்ணப்பதாரரின் தோட்ட விடுகைப் பத்திரம் / விண்ணப்பதாரரின் சான்றுப்படுத்தப்பட்ட ஜாதகக்குறிப்பு பிரதி / விண்ணப்பதாரரின் விவாகச் சான்றிதழ் / விண்ணப்பதாரரின் குடியுரிமைச் சான்றிதழ் / விண்ணப்பதாரரின் பிறந்த திகதி அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணம்)
  2. விண்ணப்பதாரர் பிறப்புச் சான்றிதழ் அல்லது உத்தேச வயதுச் சான்றிதழ் இல்லாமல் 40 வயதுக்கு மேல் இருந்தால், மேலதிக மாவட்டப் பதிவாளரால் வழங்கப்பட்ட தேடுதல் விளைவுப் பத்திரத்திரத்தின் குறிப்புடன் பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்துவதற்கு முறையான சத்தியக்கடதாசி மற்றும் பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளக்கூடிய எழுத்துப்பூர்வ சாட்சி (பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் / பாடசாலை விடுகைப் பத்திரம் / தோட்ட விடுகைப் பத்திரம் / முதியோர் அடையாள அட்டை /ஞானஸ்நான சான்றிதழ்)
  3. வெளிநாட்டில் பிறந்த நபர் ஒருவரின் பெற்றோர் இலங்கை பிரஜையாக இருப்பின் இலங்கை குடியுரிமை பெற்றுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்படும் குடியுரிமைச் சான்றிதழ் (குடியுரிமைச் சான்றிதழின் மாதிரி இணைப்பு).
  4. இரட்டை குடியுரிமை பெற்ற நபராயின் இரட்டை குடியுரிமை சான்றிதழ். (இரட்டை குடியுரிமைச் சான்றிதழின் இணைப்பு மாதிரி)
  5. மதகுருமார்களுக்காக பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
  6. பௌத்த துறவியின் பெயரானால், பௌத்த மத அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சாமனேர சான்றிதழ் அல்லது உபசம்பதா சான்றிதழ்
    ஏனைய மத குருமார்களின் குருத்துவத்தை / புரோகித்தை உறுதிபடுத்தி உரிய திணைக்களங்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ்
    துறவு வாழ்க்கையிலிருந்து மீண்ட பின்னர் அது தொடர்பில் உறுதிப்படுத்தி உரிய திணைக்களங்களின் மூலம் வழங்கப்பட்ட சான்றிதழ்திணைக்களங்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ்
  7. கணவர் பெயர் அல்லது குடும்பப்பெயருக்கு விண்ணப்பித்தால், மேலதிக மாவட்ட பதிவாளர் மூலம் சான்றுப்படுத்தப்பட்ட விவாகச் சான்றிதழ்.
  8. விண்ணப்பதாரர் பயன்படுத்தும் தேசிய அடையாள அட்டை எண் தொடர்பான பதிவுகள் திணைக்கள தரவு அமைப்பில் இல்லாவிட்டால், தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தியதற்கான எழுத்துப்பூர்வ ஆதாரம்.

தேசிய அடையாள அட்டைகளை விநியோகித்தல்

சாதாரண சேவை கிராம அலுவலரால் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் அந்தந்த பிரதேச செயலகங்களின் அடையாள அட்டை பிரிவு மூலம் விண்ணப்பம் மற்றும் உரிய ஆவணங்களை திணைக்கள கணினி அமைப்பிற்கு சமர்ப்பித்த பின்னர் விண்ணப்பதாரருக்கு தபால் மூலம் விநியோகிக்கப்படும்.
ஒருநாள் சேவை ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பத்தரமுல்லை தலைமை அலுவலகம் அல்லது காலி மாகாண காரியாலயத்திற்குச் சென்று சேவையைப் பெறலாம்.
தேசிய அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்ளல்

தேசிய அடையாள அட்டை திருத்துவதற்கான சந்தர்ப்பம்

ஒரு தேசிய அடையாள அட்டை சேதமடைந்தால் அல்லது அதில் உள்ள தகவல்கள் அழிந்திருந்தாலோ அல்லது வாசிக்க முடியாத நிலையிலோ அல்லது அதில் உள்ள தகவல்கள் கிட்டத்தட்ட படிக்க முடியாத நிலையில் ஏற்பட்டாலோ அல்லது தேசிய அடையாள அட்டையில் உள்ள தகவல்கள் மாறியிருந்தாலோ அல்லது அடையாள அட்டையில் தவறான தகவல்கள் இடம் பெற்றிருப்பது தெரியவரும் பட்சத்தில், தேசிய அடையாள அட்டையில் திருத்தம் செய்வதற்கு உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை சமர்ப்பித்தல்.

விண்ணப்பதாரி விண்ணப்பத்தை சான்றுறுதிப்படுத்தும் உத்தியோகத்தர்
1 தேசிய அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்ள உள்ள தோட்ட குடியிருப்பாளர் தோட்ட அதிகாரி
2 தேசிய அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்ள உள்ள தோட்ட குடியிருப்பாளர் அல்லாத எந்தவொரு விண்ணப்பதாரர் கிராம அலுவலர் (பிரதேச செயலாளரின் மேலொப்பம் கட்டாயம்)
ஒவ்வொரு விண்ணப்பதாரரும் சம்பந்தப்பட்ட சான்றுறுதிப்படுத்தும் உத்தியோகத்தர் மூலம் விண்ணப்பப் படிவத்தை அனுப்புவது கட்டாயமாகும்.

கட்டண அறவீடு

1 திருத்தம் செய்யப்பட்ட தேசிய அடையாள அட்டை விநியோகிப்பதற்கான கட்டணம் (புதிய கட்டண அறவீடு தொடர்பான அறிவிப்பு) ரூ.500.00
2 சாதாரண சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் தேசிய அடையாள அட்டையை அனுப்புவதற்கான கட்டணம் ரூ.120.00

விண்ணப்பத்தை சான்றுறுதிப்படுத்தும் உத்தியோகத்தர்கள் ஊடாக இந்த கட்டணங்களை அந்தந்த பிரதேச செயலகத்தின் காசாளருக்கு செலுத்த முடியும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  1. சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் (ஆ.ப.தி./வி/1,7,8 விண்ணப்பப்படிவம்)
  2. இறுதியாக பயன்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டை
  3. மேலதிக மாவட்டப் பதிவாளரால் சான்றளிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் அல்லது பிறப்புப் பதிவேட்டில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட குறிப்பு
  4. 06 மாத காலத்திற்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட ICAO தரமுடைய புகைப்படம்
  5. விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு

  1. பிறப்புச் சான்றிதழ் இல்லையாயின் உத்தேச வயது சான்றிதழுடன் பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிபடுத்தக்கூடிய ஆவணம் (பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் / பாடசாலை விடுகைப் பத்திரம் / தோட்ட விடுகைப் பத்திரம் / விண்ணப்பதாரரின் சான்றுப்படுத்தப்பட்ட ஜாதகக்குறிப்பு பிரதி / விண்ணப்பதாரரின் விவாகச் சான்றிதழ் / விண்ணப்பதாரரின் குடியுரிமைச் சான்றிதழ் / விண்ணப்பதாரரின் பிறந்த திகதி அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணம்)
  2. வெளிநாட்டில் பிறந்த நபர் ஒருவரின் பெற்றோர் இலங்கை பிரஜையாக இருப்பின் இலங்கை குடியுரிமை பெற்றுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்படும் குடியுரிமைச் சான்றிதழ். (குடியுரிமைச் சான்றிதழின் மாதிரி இணைப்பு)
  3. இரட்டை குடியுரிமை பெற்ற நபராயின் இரட்டை குடியுரிமை சான்றிதழ் (இரட்டை குடியுரிமைச் சான்றிதழின் இணைப்பு மாதிரி).
  4. மதகுருமார்களுக்காக பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  5. பௌத்த துறவியின் பெயரானால், பௌத்த மத அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சாமனேர சான்றிதழ் அல்லது உபசம்பதா சான்றிதழ்
    ஏனைய மத குருமார்களின் குருத்துவத்தை / புரோகித்தை உறுதிபடுத்தி உரிய திணைக்களங்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ்
    துறவு வாழ்க்கையிலிருந்து மீண்ட பின்னர் அது தொடர்பில் உறுதிப்படுத்தி உரிய திணைக்களங்களின் மூலம் வழங்கப்பட்ட சான்றிதழ்
  6. குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவுக்கு விண்ணப்பிக்காத விண்ணப்பதாரியாயின்
  7. முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (ஆ/ப/தி/இ/02/03/படிவம்)
    பரிந்துரைக்கப்பட்ட தண்டப்பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு (இணைப்பு)
  8. கணவர் பெயர் அல்லது குடும்பப்பெயருக்கு விண்ணப்பித்தால், மேலதிக மாவட்ட பதிவாளர் மூலம் சான்றுப்படுத்தப்பட்ட விவாகச் சான்றிதழ்

தேசிய அடையாள அட்டைகளை விநியோகித்தல்

சாதாரண சேவை கிராம அலுவலரால் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் அந்தந்த பிரதேச செயலகங்களின் அடையாள அட்டை பிரிவு மூலம் விண்ணப்பம் மற்றும் உரிய ஆவணங்களை திணைக்கள கணினி அமைப்பிற்கு சமர்ப்பித்த பின்னர் விண்ணப்பதாரருக்கு தபால் மூலம் விநியோகிக்கப்படும்.
ஒருநாள் சேவை ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பத்தரமுல்லை தலைமை அலுவலகம் அல்லது காலி மாகாண காரியாலயத்திற்குச் சென்று சேவையைப் பெறலாம்.
இரட்டை குடியுரிமை பிரஜைகளுக்காக தேசிய அடையாள அட்டை விநியோகித்தல்

1948 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க குடியுரிமைச் சட்டத்தின் 19(2) பிரிவின் கீழ் இரட்டைக் குடியுரிமை

9(2) பிரிவின் கீழ் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் குடியுரிமையை இழந்து மீண்டும் இலங்கைக் குடியுரிமையைப் பெற்றுள்ளதால் பழைய தேசிய அடையாள அட்டை இலக்கத்தை இரத்து செய்ய வேண்டும். அத்துடன் பழைய தேசிய அடையாள அட்டை இலக்கம் இரத்து செய்யப்பட்டு புதிய தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்கப்படுவதுடன் இலக்க மாற்றத்தை உறுதிப்படுத்தும் கடிதம் திணைக்களத்தின் மூலம் வழங்கப்படும்.

1948 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க குடியுரிமைச் சட்டத்தின் 19(3) பிரிவின் கீழ் இரட்டைக் குடியுரிமை

19(3) பிரிவின் கீழ் குடியுரிமை பெற்றிருந்தால், குடியுரிமை இரத்து செய்யப்படாது, எனவே அந்த நபர்களின் பழைய தேசிய அடையாள அட்டை இலக்கம் இருக்குமானால், அந்த இலக்கம் இரத்து செய்யப்படாது, அதே இலக்கத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்.

19(2) இரட்டை குடியுரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  1. சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் (ஆ.ப.தி./வி/1,7,8 விண்ணப்பப்படிவம்)
  2. இரட்டை குடியுரிமை சான்றிதழின் மூலப்பிரதி அல்லது சான்றுபடுத்தப்பட்ட பிரதி
  3. தேசிய அடையாள அட்டை, பிரதேச செயலகத்தின் ஆட்களைப் பதிவு செய்யும் பிரிவில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணம்
  4. இரட்டை குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த திகதிக்கும் இடைப்பட்ட காலம் 06 மாதங்களுக்கும் மேலாக இருந்தால், உரிய காலத்திற்குள் அடையாள அட்டை பெறப்படவில்லை என்றும் அதற்காக விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதற்கான பிரகடனம் (படிவத்தைப் பதிவிறக்கவும்)

இரட்டை குடியுரிமையாளர்களுக்காக 19(2) தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான கட்டண அறவீடு

1 இரட்டை குடியுரிமையாளர்களுக்காக 19(2) தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான கட்டண அறவீடு ரூ.200.00
2 சாதாரண சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் தேசிய அடையாள அட்டையை அனுப்புவதற்கான கட்டணம் ரூ.120.00
3 இரட்டைக் குடியுரிமை பெற்ற திகதிக்கும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த திகதிக்கும் இடைப்பட்ட காலம் 06 மாதங்களுக்கு மேல் இருந்தால் ரூ.2500.00

மேற்படி கட்டணத்தை, விண்ணப்பத்தை சான்றுறுதிப்படுத்தும் சான்றளிக்கும் உத்தியோகத்தர்களினூடாக செலுத்த முடியும் எனவும், தண்டப்பணம் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தின் காசாளரிடம் செலுத்த வேண்டும்.

1948 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க குடியுரிமைச் சட்டத்தின் 19(3) பிரிவின் கீழ் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்கும் இரட்டை குடியுரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்.

மேலே 19(2)ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுக்கு மேலதிகமாக,
  1. அடையாள அட்டை திருத்தம் என்றால் பழைய தேசிய அடையாள அட்டை, இல்லையேல் தேசிய அடையாள அட்டை தொலைந்து போனதாக பொலிஸ் அறிக்கை
  2. 15 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் முதன்முறையாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தால், உரிய காலத்திற்குள் அடையாள அட்டை பெறப்படவில்லை எனவும் அது தொடர்பாக விண்ணப்பப்படிவம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதற்கான (ஆ.ப.தி/இ/02/03) பிரகடனம் (படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளவும்).
  1. சமர்ப்பிக்கப்பட்ட இரட்டை குடியுரிமை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் வழங்கப்படும்.
  2. இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரிலிருந்து வேறுபட்ட பெயரைக் கோரினால், அந்த கோரிக்கையின் படி இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழில் உள்ள பெயரைத் திருத்தம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  3. மேற்கூறிய இரண்டு சந்தர்ப்பங்களிலும், இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரும், பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரும் வேறுபட்டிருந்தால், பிறப்புச் சான்றிதழை திருத்தம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  4. இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழில் தந்தையின் பெயர் / குடும்பப்பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் போது, ​​விண்ணப்பதாரரின் பெயருடன் தந்தையின் பெயர் / குடும்பப்பெயர் கோரப்பட்டால் வழங்க முடியும்.
  5. இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயருடன் திருமணச் சான்றிதழைச் சமர்ப்பித்து, கணவரின் பெயர்/குடும்பப் பெயரைக் கோரினால் வழங்க முடியும்.

1948 ஆம் ஆண்டு 19ஆம் இலக்க குடியுரிமைச் சட்டத்தின் 19(2) மற்றும் 19(3) பிரிவின் கீழ் குடியுரிமையைப் பெற்ற இலங்கையின் இரட்டைக் குடியுரிமையாளர்களான நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்காக தமது நிரந்தர வதிவிடத்தை நிரூபிக்க முடியாத சந்தர்ப்பங்களில் நெருங்கிய உறவினர் / நண்பரின் முகவரியைப் பயன்படுத்தி தேசிய அடையாள அட்டையைத் தயாரித்து கொள்ள முடியும், அங்கு, ஆ.ப.தி./இ/01/04 படிவத்தின் மூலம் முகவரியை உறுதிப்படுத்தி, தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். (படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்)

ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளல்
தேசிய அடையாள அட்டையை விரைவாகப் பெற வேண்டிய நபர்களுக்கு ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.

ஒருநாள் சேவையானது ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் காலி மாகாண காரியாலயத்திலும் இடம்பெறுகிறது. காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தலைமை அலுவலகத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் 9வது மாடியில் உள்ள D பிரிவிற்கு சென்று இந்த சேவையைப் பெறலாம்.

கட்டணம் / தாமதக்கட்டணம் அறவிடுதல்

1 ஒரு நாள் சேவை கட்டணம் ரூ.2000/-
2 முதற் தடவையாக தேசிய அடையாள அட்டை விநியோகிப்பதற்கான கட்டணம் ரூ.200/-
3 திருத்தம் செய்யப்பட்ட தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளுதல் ரூ.500/-
4 தொலைந்து போன தேசிய அடையாள அட்டைக்கு பதில் புதிய தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளுதல் ரூ.1000/-
5 15 வயதை பூர்த்தி செய்த நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத விண்ணப்பதாரருக்கான தண்டப்பணம் ரூ.2500/-
6 குடியுரிமைச் சட்டத்தின் 19 (2) பிரிவின் கீழ், இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 06 மாதங்களுக்குள் தேசிய அடையாள அட்டையைப் பெறாத விண்ணப்பதாரருக்கான தண்டப்பணம். ரூ.2500/-

மேற்கூறிய கட்டணங்கள் மற்றும் தண்டப்பணம் ஒரு நாள் சேவையின் காசாளரிடம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

முதற் தடவையாக தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள
திருத்தம் செய்யப்பட்ட தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள
தொலைந்து போன தேசிய அடையாள அட்டைக்கு புதிய தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள
இரட்டை குடியுரிமைதாரர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்

மேற்கண்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களுக்கும் தேவையான ஆவணங்களுடன் கிராம அலுவலரை சந்தித்து விண்ணப்பத்தை அனுப்ப முடியும்.
விண்ணப்பதாரர் ஒரு நாள் சேவைக்கு வரும் போது மேலே குறிப்பிடப்பட்ட ஆவணங்களின் "மூலப்பிரதிகளை" கொண்டு வருவது கட்டாயமாகும்.