ஆணையாளர் நாயகம்
திருமதி. எம்.எஸ்.பி சூரியப்பெரும
ஆணையாளர் நாயகம் (செயல்திறன்)
தொ.இல.: 011 286 2 255
தொலைநகல் : 011 286 2 198
மின்னஞ்சல் : com.general.drp@gmail.com
மேலதிக ஆணையாளர் நாயகம்
திருமதி. ஆர்.எல்.எஸ்.பீ. சுவர்ணலதா
மேலதிக ஆணையாளர் நாயகம்
தொ.இல. : 011 522 6 103
தொலைநகல் : 011 286 2 201
மின்னஞ்சல் : adcg@drp.lk
நிர்வாகக் கிளை

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் மனித வளத்தை இயக்குதல், முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி செய்தல் என்பன இக் கிளையின் பொறுப்பாகும். அதனடிப்படையில் திணைக்களத்துக்கு ஊழியர்களை இணைத்துக் கொள்ளுதல், நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், ஓய்வு பெறவைத்தல், ஒழுக்க நடைமுறைகள் மற்றும் தனியாள் கோவை இற்றைப்படுத்தல் என்பன இதன் அடிப்படை செயற்பாடுகளாகும்.

இங்கு, திணைக்கள ஊழியர்களின் தேசிய மற்றும் வெளிநாட்டு விடுமுறைகள் சம்பந்தப்பட்ட கடமைகள், ஊழியர் குழாமின் தரவுகளை இற்றைப்படுத்தல், திணைக்கள போக்குவரத்து தொடர்பான கடமைகள், பராமரிப்பு மற்றும் சுத்தப்படுத்தல் தொடர்பான கடமைகளுக்கு ஊழியர்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் கொடுப்பனவு வழங்கல் தொடர்பான கடமைகள், திணைக்கள ஊழியர்களின் அக்ரஹார காப்புறுதி தொடர்பான கடமைகள், திணைக்களத்திற்கு கிடைக்கும் மற்றும் திணைக்களத்தினால் அனுப்பப்படும் கடிதங்கள் (தபால்) தொடர்பான கடமைகள் என்பன வெளிப்படைத் தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

ஆணையாளர்
...
  பெயர் : திருமதி துஷாரி பிரசங்கிகா சூரியாராச்சி
  தொ.இல. :0112862202/5226105
  தொலைநகல் : 0112862363
  மின்னஞ்சல் :com_ admin@drp.lk
பிரதி ஆணையாளர்
...
  பெயர் : திருமதி. டபிள்யூ. அயோத்தியா. எஸ். ஜெயவர்தன
  தொ.இல. : 0115226136
  தொலைநகல் : 0112862137
  மின்னஞ்சல் :ac_adm@drp.lk
இயக்கம் மற்றும் தகவல் தொழிநுட்பக் கிளை

தேசிய அடையாள அட்டை தயாரிக்கும் செயற்பாடுகளை வினைத்திறனுடன் இயக்கும் பொறுப்பு இந்தக் கிளையினுடையதாகும். அதனடிப்படையில், இலங்கை பிரஜைகளுக்கு நம்பிக்கையான ஆளடையாளத்தை வழங்குவதில், 17 கிளைகளாக செயற்படும் (செயற்பட்டு விளங்குகின்றன.) தேசிய அடையாள அட்டை தயாரிக்கும் செயற்பாடுகளை திட்டமிடல், ஏற்பாடு செய்தல், இயக்குதல் மற்றும் மேற்பார்வை செய்தல் என்பன இக்கிளையினூடாகவே நடை பெறுகின்றன.

9ம் மாடியின் B பகுதியில் நிறுவப்பட்டுள்ள இக்கிளையினுாடகவே தேசிய அடையாள அட்டையினை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்புச் செய்தல், 1948ம் ஆண்டின் 19ம் இலக்க குடியுரிமைச் சட்டத்தின் (2)ம் பிரிவின் கீழ் குடியுரிமை பெற்ற நபர்களின் முந்தைய தேசிய அடையாள அட்டைகளை திணைக்களத்துக்கு மீளப்பெறல், இறப்பெய்தியவர்களின் மற்றும் தொலைந்து மீளக் கிடைக்கப் பெற்ற தேசிய அடையாள அட்டைகளை திணைக்களத்துக்கு மீளப்பெறல், பாடசாலை விண்ணப்பதாரிகளின் தேசிய அடையாள அட்டை தயாரித்தல் தொடர்பான தகவல்களை வழங்குதல் மற்றும் பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான தரவுகளை உறுதிப்படுத்தும் கடிதங்களை வழங்குதல், ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு மீளக் கிடைக்கும் அடையாள அட்டைகளை தரவுத் தளத்தில் பதிவேற்றுதல் மற்றும் மீள வழங்குதல், தேசிய அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவைகளை ஏற்பாடு செய்தல் மற்றும் சிறைக் கைதிகளுக்கான தேசிய அடையாள அட்டை தயாரித்தல் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.
தேசிய அடையாள அட்டை வழங்கும் நடைமுறைகளை திட்டமிடல், மேற்பார்வை மற்றும் செயற்படுத்துதலை இலகுபடுத்துவதற்காக இக்கிளை பின்வருமாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

















ஆணையாளர்
...
  பெயர் : திருமதி. ஜீ.டீ. நதீகா
  தொ.இல. : 0115226106
  தொலைநகல் : 0112862290
  மின்னஞ்சல் : com_op@drp.lk
பதில் ஆணையாளர்
...
  பெயர் :திரு. K.M.M. சமிந்த
  தொ.இல. : 0115226112
  தொலைநகல் : 0112862290
  மின்னஞ்சல் :ac_op2@drp.lk

அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக் கிளை

எமது திணைக்களத்தின் மனித வளத்தை ஊக்கப்படுத்தி அவர்களுக்கான பயிற்சி வாய்ப்புகளை வழங்குதலும் அறிவு, மனநிலை மற்றும் திறமை மூலமான பரிபூரணமான அரச ஊழியர் குழாமொன்றை உருவாக்குவதும் பிரதான தொழிற்பாடாகும். மேலும் விருப்புக்குரிய அலுவலக சூழலை கட்டியெழுப்புவதில் வேலை நிறைவுசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை அழித்தல் செயற்பாடுகள் மற்றும் திணைக்கள செயல்திறனை மேம்மபடுத்துவதுடன் வினைத்திறனான பொதுமக்கள் சேவை வழங்கும் சிறந்த நிறுவனமாக உருவாக்குவதும் இக்கிளையின் பிரதான நோக்கங்களாகும் நிலையான அபிவிருத்தி விடயத்தின் கீழ் சட்ட நிபந்தனைகள் தொடர்பாக கவனத்திலெடுத்து 1968ம் ஆண்டின் 32ம் இலக்க ஆட்களைப் பதிவுசெய்யும் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்ளை கவனத்திலெடுத்து செயற்படுத்துவதும், திணைக்களத்துடன் தொடர்புடைய அனைத்து அமைச்சரவை ஆவணங்கள் தொடர்பில் தொடர்புபடுத்தல்கள் செய்வதும், தகவலறியும் சட்டம் தொடர்பில் தொடர்புபடுத்தல் செய்வதும், தகவல் பாதுகாப்பு சட்டம் செயற்படுத்தல் தொடர்பிலான நடவடிக்கைகளை தொடர்புபடுத்தும் செயற்பாடுகளும் பிறப்பு சான்றிதழில் தேசிய அடையாள அட்டை (slin) உட்செலுத்தல் தொடர்பான தொடர்புபடுத்தல் நடவடிக்கைகளும் இக்கிளையின் மூலம் வினைத்திறனுடனும் நட்புறவுடனும் வழங்கப்படுகின்றன.

ஆணையாளர்
...
  பெயர் : திருமதி. எஸ்.ஏ. எரந்திகா டபிள்யூ. குலரத்ன
  தொ.இல. : 011526104
  தொலைநகல் : 0112862231
  மின்னஞ்சல் : com_rd@drp.lk
தகவல் தொழிநுட்பக் கிளை

ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும் நம்பகமான அடையாளத்தை வழங்கும் செயல்பாட்டில், நாடளாவிய மட்டத்தில் விரும்பிய இலக்குகளை அடைந்து கொள்வதற்காக, புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கும், தேசிய மட்டத்தில் தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதிலும் முன்னின்று செயற்படுவது தகவல் தொழில்நுட்பக் கிளையின் பிரதான பொறுப்பாகும். இங்கு, ஆட்பதிவுத் திணைக்களத்தின் மென்பொருளை (software) இற்றைப்படுத்தி தடங்கலின்றி சேவை வழங்குவதுடன், தனிநபர் தனித்துவத்திற்கும் ஆளடையாளத்திற்கும் பாதிப்புகள் ஏற்படாதவண்ணம் செயற்படுதலும், திணைக்கள கணனித் தொகுதியில் ஏற்படும் முடங்கல்களை (தடங்கல்களை) நிவர்த்தி செய்து கணனித் தொகுதியை பராமரித்தலும், சேமிப்பகத் தொகுதி (server), திணைக்கள பிரதான அலுவலகம், மாகாண அலுவலகங்கள் மற்றும் பிரதேச அலுவலகங்களை வலையமைப்பொன்றின் மூலம் ஒன்றிணைத்து தொழில்நுட்ப சேவைகளை வழங்குகின்றது.

ஆணையாளர்
...
  பெயர் : திருமதி எம்.ஈ.வீரசிங்க
  தொ.இல. : 0115226127
  தொலைநகல் : 012862168
  மின்னஞ்சல் : com_it@drp.lk
கணக்குக் கிளை

திணைக்களத்தின் அனைத்து இலக்குகளும் அடைவதற்கு உறுதுணையாக, அரச நிதி ஒழுங்குமுறைகளுக்கு அமைவாக வெளிப்படைத் தன்மையுடனும் பொறுப்புடனும், சரியான நிதி நிர்வாகம் இந்தக் கிளையினால் செயற்படுத்தப்படுகின்றது.

பிரதான கணக்காளர்
...
  பெயர் : திரு. டி.எஸ். சமரவிக்கிரம
  தொ.இல : 0112862251
  தொலைநகல் : 0112862267
  மின்னஞ்சல் : ca@drp.lk
கணக்காளர் (வழங்கல்)
...
  பெயர் : திருமதி. டி.பி.சி.சி. இளங்கரத்ன
  தொ.இல :0115226137
  மின்னஞ்சல் :accnt2@drp.lk
கணக்காளர் (பெறுகை)
...
  பெயர்: திரு. ஜே.ஜி.ஏ.டி. குமார
  தொ.இல : 0115226172
  மின்னஞ்சல் :accnt1@drp.lk
உள்ளக கணக்காய்வு கிளை

இலங்கை பிரஜைகளின் அடையாளத்தை உறுதிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட ஆட்களை பதிவுசெய்யும் திணைக்களத்தின் நடவடிக்கைகள் வெளிப்படை தன்மையுடன் முறையாக நடாத்திச் செல்லுவதன் பொருட்டு,ஊழியர்களின் தவறுகள் மற்றும் ஊழல்களை வெளிக்கொணர்ந்து பிரதான பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தல், அவ்வாறான ஊழல்களை தவிர்ப்பதற்கான உதவிளை வழங்குவது என்பன இக்கிளையின் பிரதான செயற்பாடுகளாகும். இங்கு உள்ளக கணக்கு திட்டங்ளை வகுத்தல், நிறுவன, இயக்கம், நிர்வாகம், தொடர்பாடல் மற்றும் நிதி கிளைகள் தொடர்பான கவனத்தைசெலுத்துதல், முறைப்பாடு செய்யப்பட்ட அல்லது கண்டறியப்பட்ட திணைக்கள முறைகேடுகள் தொடர்பில் பரிசோதனை செய்யதல், விசாரணைகள் நடாத்துதல், முகாமைத்துவ கணக்காய்வு திணைக்களத்தின் முலம் அவ்வப்போது விடுவிக்கப்படும் அறிவித்தல்களின் படி நடப்பதன் மூலம் கொள்கையுடன் ஒழுக்கமுடனும் கூடிய முறையான சேவை வழங்களை உறுதிப்படுத்துவதற்காக செயற்படுகின்றது.

பிரதான உள்ளக கணக்காய்வாளர்
...
  பெயர் : ஜே.கே.டி. திருமதி. நிலாந்தி
  தொ.இல.: 0112862156/0115226120
  மின்னஞ்சல் : auditdrp@gmail.com