மாகாண பிரதேச செயலக அலுவலகங்களை தொடர்புபடுத்தும் கிளை
இக்கிளை மூலம் பிரதேச செயலகங்களில் நிறுவப்பட்டுள்ள கிளை அலுவலகங்களின் செயற்பாடுளை தொடர்புபடுத்தல் ,மேற்பார்வை செய்தல் மற்றும் தடங்கலின்றி சரியான முறையில் அலுவலக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. பிரதேச அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கிடையிலான தொடர்புபடுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வது பிரதான கடமையாக உள்ள அதேவேளை, பிரதேச அலுவலகங்களில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு தேவையான பயிற்சி ஏற்பாடு செய்தல், பிரதேச அலுவலகங்களின் மேற்பார்வை மற்றும் செயற்பாட்டு அறிக்கைகளை கையாளுதல், பிரதேச அலுவலகங்களின் உட்கட்மைப்பு வசதிகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், பிரதேச அலுவலகங்களில் உள்ள உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் மற்றும் பிரச்சனைகள் சம்மந்தமாக நடவடிக்கைகள் எடுத்தல் போன்ற கடமைகள் இக்கிளையினூடாக செய்யப்பட்டு மிகவும் நெருங்கியதும் வினைத்திறனானதுமான பொதுமக்கள் சேவை வழங்கப்படுகின்றது
|
  பெயர் : திரு. எஸ்.எம் புளொக்   தொ.இல :0115226146   தொலைநகல் : 0112874625   மின்னஞ்சல் : ac_dscu@drp.lk |