ICAO புகைப்படம்

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக குடிமக்களின் புகைப்படங்களை பெறுதல்
1968ம் ஆண்டின் 32ம் இலக்க ஆட்களை பதிவு செய்யும் சட்டத்தின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, 2016.02.10ம் திகதி பாராளுமன்றத்தினூடாக அனுமதியளிக்கப்பட்ட 2006ம் ஆண்டின் 08ம் இலக்க திருத்தப்பட்ட கட்டளையின் படி, தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் (International Civil Aviation Organization - ICAO) ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தில் நிறுவப்பட்டுள்ள இலத்திரனியல் அடையாள அட்டை திட்டத்தின் ஊடாக, இலங்கையில் புகைப்பட நிலையமொன்றை வைத்திருக்கும் புகைப்படக் கலைஞர்களுக்கு ICAO தர நியமங்களுக்கு அமைவாக புகைப்படங்கள் எடுப்பதற்கான பதிவுகளை செய்து கொள்ள முடியும்.



நாடு முழுவதிலும் உள்ள புகைப்பட நிலையங்களை வைத்திருக்கும் புகைப்படக் கலைஞர்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு, ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் நிபந்தனைகள் மற்றும் விதிகளுக்கு இணங்க, ICAO தரத்திற்கு அமைவாக தனிநபர்களின் புகைப்படங்களை எடுப்பதற்கு தேவையான மென்பொருள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட புகைப்பட நிலையமொன்றை நடாத்திச்செல்லும் போது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயங்கள்.

    புகைப்பட நிலையங்களை (ஸ்டூடியோ) பதிவு செய்தல்
    புகைப்பட நிலையங்களின் பதிவினை புதுப்பித்தல்
    புகைப்பட நிலையங்களின் பதிவினை தற்காலிகமாக இடைநிறுத்துதல்
    பதிவுசெய்யப்பட்ட புகைப்பட நிலையங்களை கறுப்பு பட்டியலில் சேர்த்தல்
    புகைப்பட நிலையத்தின் உரிமை மாற்றம் செய்தல்
    புகைப்பட நிலையத்தின் முகவரியில் மாற்றம் செய்தல்

புகைப்பட நிலையங்களை (ஸ்டூடியோ) பதிவு செய்தல்.

மேற்குறிப்பிட்ட ICAO தர நியமங்களுக்கு அமைய புகைப்படம் எடுப்பதற்காக நாடு முழுவதும் உள்ள புகைப்பட நிலையங்கள் பதிவுசெய்யப்படும் (பதிவு கட்டணம் ரூ. 15,000.00 ஆகும்)
புகைப்பட நிலையங்களை பதிவுசெய்வதற்காக விண்ணப்பத்தினை சரியாக பூர்த்திசெய்து (பதிவிறக்கம் செய்து கொள்ள), தேவையான சான்றிதழ்களின் பிரதிகளை இணைத்து ஆணையாளர் நாயகம், ஆட்களை பதிவுசெய்யும் திணைக்களம், 12வது மாடி, சுஹுருபாய, பத்தரமுல்லை. என்ற முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

பதிவு செய்வதற்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்கள்,
  1. சரியாக பூர்த்திசெய்யப்பட் விண்ணப்ப்படிவம்
  2. புகைப்பட நிலையத்தின் வியாபாரப் பதிவுச்சான்றிதழின் (Business Registration) சான்றுப்படுத்தப்பட்ட பிரதி (கிராம சேவகர் அல்லது சமாதான நீதவான் மூலம் சான்றுப்படுத்தப்படல் வேண்டும்).
  3. விண்ணப்பிக்கும் புகைப்பட நிலைய உரிமையாளரின் தேசிய அடையாள அட்டையின் நிழற்பிரதி (கிராம சேவகர் அல்லது சமாதான நீதவான் மூலம் சான்றுப்படுத்தப்படல் வேண்டும்).
  4. விண்ணப்பதாரியின் தொழில்முறை தகுதிகளை உறுதிப்படுத்துவதற்காக (அடிப்படை, டிப்ளோமா, பட்டம் - தொழில்முறை) சான்றிதழ்களின் சான்றுப்படுத்தப்பட்ட நிழற்பிரதி).

பதிவை புதுப்பித்தல்

பதிவுசெய்யப்பட்ட புகைப்பட நிலையங்களின் மென்பொருள் உரிமையை புதுப்பிப்பதற்காக, ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை ரூ. 3,000.00 அறவிடப்படும். ஒப்பந்தக் காலம் முடிவடைவதாக மென்பொருள் ஊடாக தெரிவிக்கப்படும் அதேவேளை நிகழ்நிலை (online) மூலம் பணம் செலுத்தி பதிவை புதுப்பித்துக் கொள்ள முடியும். நிகழ்நிலை (online) மூலம் பணம் செலுத்தாமல் வங்கியினூடாக பணம் செலுத்துவதாயின் வங்கியில் வழங்கப்படும் பற்றுச்சீட்டின் பிரதியை (enic.drp@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் பதிவினை புத்துப்பித்து கொள்ளலாம்.


பதிவை புதுப்பிப்பதற்குத் தேவையான வெவ்வேறு சந்தர்ப்பங்கள் வருமாறு.
  1. ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையும் புகைப்பட நிலையங்களின் பதிவை புதுப்பித்தல். (மேலே உள்ள புதுப்பித்தல் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.).
  2. புகைப்பட நிலைய பதிவு தற்காலிகமாக இரத்து செய்யப்படும் சந்தர்ப்பங்களில்
  3. புகைப்பட நிலையங்களின் உரிமையாளர் மாறும் சந்தர்ப்பங்களில்.
  4. புகைப்பட நிலையங்களின் அமைவிடத்தில் மாற்றம் ஏற்படும் சந்தர்ப்பங்களில். ( முகவரியில் மாற்றம் ஏற்படும் போது)
  5. முதல் உரிமையாளர் இறப்பெய்தும் சந்தர்ப்பங்களில்.
நிலையங்களின் பதிவினை தற்காலிகமாக இடைநிறுத்துதல்.

ICAO தர நியமங்களிலிருந்து மாறுபட்ட புகைப்படங்ளை திணைக்களத்திற்கு அனுப்புவது மென்பொருள் தளம் மூலம் கண்டறியப்பட்டால் புகைப்பட நிலையத்தின் பதிவை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக உரிய புகைப்பட நிலையத்திற்கு தகவல் அனுப்பப்படும். எனவே மீண்டும் பதிவை புதுப்பிப்பதானால் எழுத்துமூலமான கோரிக்கை சமர்பிக்கப்பட வேண்டும். மேலும் குற்றத்தின் தன்மையைப் பொறுத்து, விசாரணை நடத்தப்பட்டு, அதன் அதன் முடிவுகளின் அடிப்படையில் பதிவை தற்காலிக இடைநிறுத்தம் நீக்கப்படுதல் அல்லது கறுப்புப்பட்டியலில் சேர்த்தல் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும்.

கறுப்புப் பட்டியலில் சேர்த்தல்

முந்தைய பல தவறுகள் காரணமாக மூன்று முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்து, மீண்டும் அதே தவறுகளை செய்யும் சந்தர்ப்பங்களில் முறையான விசாரணை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, புகைப்பட நிலையங்களின் பதிவினை ரத்துசெய்வதற்கு அல்லது கறுப்புப்பட்டியலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

உரிமையில் மாற்றம் ஏற்படல்

இந்த உரிமை மாற்றம் இரண்டு வகையில் இடம்பெறலாம்.

  1. திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட புகைப்பட நிலையத்தின் உரிமையாளர் மரணித்தல்.
  2. புகைப்பட நிலையத்தின் உரிமையை மற்றொரு நபருக்கு மாற்றம்செய்தல்.
புகைப்பட நிலையத்தின் உரிமை மாறும் சந்தர்ப்பத்தின் போது, உடனடியாக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்திற்கு எழுத்து மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

வியாபார நிலையத்தை மாற்றம் செய்தல்
புதிய இடத்தில் புகைப்பட நிலையத்தை நடாத்தி செல்வதற்கு குத்தகை அல்லது வாடகை ஒப்பந்தத்துடன் புதிய முகவரியை மாற்றம் செய்வதற்கு ஏற்ப வியாபார பதிவு சான்றிதழை இற்றைப்படுத்தப்பட வேண்டியதுடன் மாற்றம் செய்ததை உறுதி செய்து புகைப்பட நிலைய உரிமையாளரினால் திணைக்களத்திற்கு எழுத்திலான விண்ணப்பமொன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

ICAO புகைப்பட நிலையங்களுக்கான குறைந்த பட்ச தகமைகள்

பொதுவான தகமைகள்

  1. புகைப்படம் எடுத்த பிறகு மென்பொருளால் வழங்கப்படும் புகைப்பட குறிப்பு சீட்டு (Photo Reference Slip) மட்டுமே வழங்க வேண்டும். வர்த்தமானி அறிவித்தலின்படி படி புகைப்படம் ஒன்றைப் பெறுவதற்கு விண்ணப்பதாரரிடம் இருந்து அறவிடப்படும் அதிகபட்சக் கட்டணமான ரூ.400/- ஐ மட்டுமே அறவிடப்பட வேண்டும்.
  2. பதிவுசெய்யப்பட்ட புகைப்பட நிலையங்களினால் மென்பொருளினூடாக பெறப்படும் ICAO தரத்திலான புகைப்படங்களை திணைக்களத்தின் தரவு அமைப்பில் உள்ளிடப்படுகின்றன. இதற்காக புகைப்பட நிலையங்களுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறை செயற்திட்ட கிளையினால் நடாத்தப்படும்
  3. பதிவு செய்யப்பட்ட புகைப்பட நிலையங்கள் ஊடாக பெறப்பட்ட புகைப்படங்கள் எடுக்கப்பட்ட நாளிலிருந்து 06 மாத காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்