சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
பொதுமக்களுக்கான தயவான அறிவித்தல்.
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் நேரடித் தொலைபேசி இலக்கமான (Hotline) 115226126 என்ற இலக்கத்தை பயன்படுத்தி, +94115226126, +0115226126 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக மற்றும் 0771167739, 0742756098 ஆகிய கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் மூலம், திணைக்களத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, தற்போது வரை சில தரப்பினரால் தனிநபர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக எங்களுக்கு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.. அந்த தரப்பினரால் அரச இலட்சினையை பயன்படுத்தி ஒரு கையடக்கத் தொலைபேசி செயலியை (APP) உருவாக்கி, அதன் மூலம் டிஜிட்டல் அடையாள அட்டை அல்லது இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்காக உங்கள் தகவல்களைப் பதிவு செய்வதாகக் கூறி, திணைக்களத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் அத்தகைய பதிவுகளை மேற்கொள்வதில்லை என்பதை நாங்கள் உங்களுக்கு வலியுறுத்துவதுடன், மேலும், அத்தகைய கையடக்கத் தொலைபேசிகளிலிருந்து வரும் அழைப்புகளுக்கு உங்கள் தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் தயவாய் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், எங்கள் நேரடித் தொலைபேசி இலக்கம் போன்ற இலக்கத்தலிருந்து அழைப்பதன் மூலமாகவோ அல்லது https://drpgov-lk.com என்ற திணைக்களத்தின் இணையதளத்தை போன்ற ஒரு போலி இணையதளத்தை பயன்படுத்தி உங்கள் தகவல்கள் கேட்கப்பட்டால், தயவுசெய்து அந்தத் தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மூலம் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அல்லது டிஜிட்டல் அடையாள அட்டைக்காக தற்போது வரை எந்த பதிவுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், மோசடி நபர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களை தயவாய் கேட்டுக்கொள்கிறோம்
ஆட்களைப் பதிவுசெய்யும் ஆணையாளர் நாயகம்
மாகாண மற்றும் பிரதேச அலுவலகம்
-

தென் மாகாண காரியாலயம்
கடவத்சத்தர பிரதேச செயலக கீழ்த்தளம்,
வக்வெல்ல வீதி, காலி
தொ.பே இல : 0912228348
தொலைநகல்: 0912228349 -

வடமேற்கு- மாகாண காரியாலயம்,
3ஆம் மாடி, புதிய வர்த்தக வளாகம்,
குருநாகல்.
தொ.பே இல : 037 222 4337
தொலைநகல்: 037 222 4336 -

வட மாகாண காரியாலயம்
வவுனியா மாவட்ட செயலக வளாகம், வவுனியா
தொ.பே இல : 0242 227 201
தொலைநகல்: 0242 227 202
-

கிழக்கு மாகாண காரியாலயம்
மண்முனை வடக்கு
பிரதேச செயலக வளாகம்,
மட்டக்களப்பு
தொ.பே இல : 065 22 29 449
தொலைநகல் : 065 22 29 448 -

மத்திய மாகாண அலுவலகம்
இல 95/26/A,
லேடி மெக்லம் வீதி,
ஹாவா எளிய, நுவரெலியா.
தொ.பே இல : 0115226175
தொலைநகல் : -

பிராந்திய அலுவலகங்கள்
தீவு முழுவதும் உள்ள பிராந்திய அலுவலகங்களிலிருந்து சேவைகள் கிடைக்கும்
தொடர்புகளுக்கு
அமைவிடம் :
10வது மாடி, சுஹுருபாய,
ஶ்ரீ சுபூதிபுர வீதி, பத்தரமுல்லை
மின்னஞ்சல் :
info@drp.lk
தொடர்புகளுக்கு :
(011) 5226100
(011) 5226126