இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை செயற்திட்டம் (e-NIC)
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டைகளை நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி மிகத் துல்லியமாகவும் திறமையாகவும் தனிநபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டம் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
15 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு இலங்கைப் பிரஜைகளின் சுயவிபரங்கள், அங்கஅடையாள தரவுகள், குடும்பத் தகவல்கள் மற்றும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) தரமுடைய புகைப்படங்களைச் சேகரித்து மீள் பதிவு செய்வதன்மூலம் குடிமக்கள் தேசிய பெயர்ப்பட்டியல் (National Register of Persons) ஒன்றினை நிறுவுதல் இத் திட்டத்தின் இறுதி இலக்காகும், பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் இலங்கை தனித்துவமான இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (SL- UDI) இலக்கத்துடன் கூடிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (e-NIC) வழங்கல் மற்றும் அதன் மூலம் அரசாங்க மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்காக தனிப்பட்ட அடையாளத்தை உறுதிப்படுத்தல் மற்றும் சான்றளிக்க தேவையான தகவல் பரிமாற்ற வழிமுறை மற்றும் சேவை தளத்தை நிறுவுதல்.
தேசிய அடையாள அட்டைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்காக குடிமக்களுக்கு பின்வரும் வசதிகளை இத்திட்டம் ஏற்கனவே வழங்கியுள்ளது.:-
தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் பிரதேச மட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய வகையில் அனைத்து
பிரதேச செயலகங்களிலும் தேவையான மனித, தொழில்நுட்ப மற்றும் பௌதீக வளங்களைக் கொண்ட 335 திணைக்கள அடையாள அட்டை பிரிவுகளை
நிறுவுதல்.
திணைக்கள சேவைகளை மாகாண மட்டத்திற்கு பரவலாக்குவதற்கு வடக்கு, கிழக்கு, தெற்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் திணைக்கள மாகாண அலுவலகங்களை நிறுவுதல்.
விரிவான சேவையை வழங்குவதற்காக உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் 2016 ஆம் ஆண்டு முதல் பத்தரமுல்லை சுஹுருபாய கட்டிடத்தில் ஆட்களளைப் பதிவுசெய்யும் திணைக்களத்தை நிறுவுதல்.
பொதுமக்களுக்கு உடனடி மற்றும் திறமையான சேவையை வழங்க VPN தொழில்நுட்பம் மூலம் பிரதேச செயலக கிளை அலுவலகங்கள் மற்றும் மாகாண அலுவலகங்களை தலைமை அலுவலகத்துடன் இணைத்தல்.
ICAO சர்வதேச தரத்தில் தனிப்பட்ட கைப்படங்களை பெற்று நிகழ்நிலை மூலம் தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவதற்காக நாடு முழுவதும் உள்ள 2341 புகைப்பட ஸ்டுடியோக்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு தேவையான மென்பொருள் நிறுவப்பட்டுள்ளது.
கையால் எழுதப்பட்டு, புகைப்படம் ஒட்டப்பட்டு மற்றும் லெமினேட் செய்யப்பட்டு தனிப்பட்ட தகவல்களுடன் வழங்கப்பட்ட பழைய அட்டைக்குப் பதிலாக 2017ம் ஆண்டு ஒக்டோபர் 27ம் திகதி முதல் ICAO புகைப்படத்துடன் ஊடொளி (LASER) தொழிநுட்பத்தில் பாலிகார்பனேட் அட்டைகளில் மும்மொழிகளிலும் அச்சிட்டு தேசிய அடையாள அட்டைகள் வழங்குதல்.
பிரதான அலுவலகத்திற்கு மேலதிகமாக, காலி மாகாண அலுவலகத்தில் மக்களுக்கான ஒரு நாள் சேவை வசதிகளை வழங்குதல்.
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையின் கட்டாயத் தேவை
எதிர்காலத்தில், இலத்திரனியல் மயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில், மக்கள் நலன்புரி, வங்கிச்சேவைகள், வாகன அனுமதிப்பத்திரம், கடவுச்சீட்டு, ஓய்வூதியம், ஊழியர் சேமலாப நிதியம், காப்புறுதி, தொழில் வாய்ப்புக்கள் உட்பட அனைத்து செயல்பாடுகளிலும் தனிப்பட்ட தகவல்களைச் உறுதிப்படுத்துவதற்கான சிறந்த ஆவணம் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை ஆகும்.