සිංහල English
 0115226100

  • முதல் பக்கம்
  • எம்மை பற்றி
    • அறிமுகம்
    • நிறுவன ஒழுங்கு
    • கிளைகள்
  • NIC பெற்றுக்கொள்ளுதல்
    • முதல் தடவையாக NIC பெறுதல்
    • தொலைந்த தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளல்.
    • தேசிய அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்ளல்
    • இரட்டை குடியுரிமை பிரஜைகளுக்காக NIC விநியோகித்தல்
    • ஒரு நாள் சேவையின் கீழ் NIC அட்டையைப் பெற்றுக்கொள்ளல்
  • பிற சேவைகள்
  • பெறுகை
  • பதிவிறக்கம்
  • F.A.Q
  • தகவல் அறியும் உரிமை
  • தொடர்புகளுக்கு
    • ஆலோசனைகள்
    • தொடர்பு விபரங்கள்
  1. முதல் பக்கம்
  2. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • சாதாரண சேவையில் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக எவ்வளவு காலம் செல்லும்?

    தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்படிவம் கையளிக்கப்படுவது தொடக்கம் அடையாள அட்டை வழங்கப்படும் வரை மொத்தமாக 16 கட்டங்களில் இந்நடைமுறை செயற்படுத்தப்படுகின்றது. முன்வைக்கப்படும் தகவல்கள்/ ஆவணங்களில் குறைபாடுகள் இல்லாதவிடத்து, விண்ணப்படிவம் கையளிக்கப்பட்டு 03 மாதங்களுக்குள் தேசிய அடையாள அட்டை விண்ணப்பதாரியின் தனிப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

  • ஒரு நாள் சேவையில் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்து எவ்வளவு நேரத்தில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்?

    ஒரு நாள் சேவையில் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்படிவம் கையளிக்கப்படுவது முதல் அடையாள அட்டை வழங்கப்படும் வரை மொத்தமாக 16 படிமுறைகளில் தேசிய அடையாள அட்டை தயாரிக்கப்படுகிறது. முன்வைக்கப்பட்டுள்ள தகவல்கள்/ ஆவணங்களில் குறைபாடுகள் இல்லாதவிடத்து, விண்ணப்படிவம் கையளிக்கப்பட்டு 03 மணித்தியாலங்களுக்குள் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

  • புதிய தேசிய அடையாள அட்டையை பெறும் போது தேசிய அடையாள அட்டை இலக்கம் எவ்வாறு வேறுப்படும்? 12 இலக்கங்களுடன் கூடிய புதிய தேசிய அடையாள அட்டை எனது தொழில் மற்றும் வங்கி நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்துமா?

    புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையில் உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கம் 12 இலக்கங்களுடன் இருக்கும். அதன்படி பழைய தேசிய அடையாள அட்டையின் இறுதியில் உள்ள V அல்லது X எழுத்து அகற்றப்பட்டு கடைசி 04 இலக்கங்களுக்கு முன்பாக ‘0’ சேர்க்கப்படுவதுடன் தேசிய அடையாள அட்டை பிறந்த ஆண்டுடன் அதாவது ‘19’ என ஆரம்பமாகும்.
    உதாரணம் – பழைய தேசிய அடையாள அட்டை இல. 855420159 V புதிய தேசிய அடையாள அட்டை இல. 19 85542 0 0159

    உங்களது புதிய தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு மேலதிகமாக, பழைய தேசிய அடையாள அட்டை இலக்கம் உங்களது அடையாள அட்டையின் பின்புறத்தில் அச்சிடப்பட்டிருக்கும். தேசிய அடையாள அட்டையின் இம்மாற்றம் தொடர்பில் வங்கி/ நிதி நிறுவனங்கள் உள்ளடங்கலாக அனைத்து அரச நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டிருப்பதால் உங்கள் அடையாளத்தை உறுதிசெய்வதில் சிக்கல்களை உருவாக்காது.

  • இரட்டைக் குடியுரிமையை 19(2) பிரிவின் கீழ் பெற்றுக் கொள்ளும் போது தேசிய அடையாள அட்டை இலக்கம் மாற்றமடைவது ஏன்? அவ்வாறு இலக்கம் மாறும் போது எனக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படுமா?

    1948ம் ஆண்டின் 18ம் இலக்க குடியுரிமை சட்டத்தின் 19(2) பிரிவின் கீழ் இரட்டை குடியுரிமையைப் பெற்றுக் கொள்ளும் நபரொருவரின் பிறப்பின் மூலம் கிடைக்கும் இலங்கை.

    குடியுரிமை இழக்கப்படுவதுடன், அதன் மூலம் நீங்கள் இதுவரை பாவித்து வந்த தேசிய அடையாள அட்டை இலக்கம் செல்லுபடியற்றதாகிவிடும்.

    அதனடிப்படையில், நீங்கள் இரட்டை குடியுரிமையை பெற்றுக் கொண்ட பின்னர், விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளும் தேசிய அடையாள அட்டையின் இலக்கம் முன்னர் பாவித்த தேசிய அடையாள அட்டை இலக்கத்தை விட வேறுபட்டதாக இருக்கும். இது தொடர்பில், ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் குறித்த இலக்கங்களை உறுதிப்படுத்தும் கடிதமொன்று விண்ணப்பதாரிக்கு வழங்கப்படும்.

  • நான் 19(3) பிரிவின் கீழ் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளேன். இரட்டை குடியுரிமை பெற்ற பின்னர் நான் மீண்டும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? அவ்வாறு விண்ணப்பிக்கும் போது எனது தேசிய அடையாள அட்டை இலக்கம் மாற்றமடையுமா?

    இல்லை.
    குடியுரிமைச் சட்டத்தின் 19(3) பிரிவின் கீழ் குடியுரிமையைப் பெறும் ஒருவருக்கு பிறப்பின் மூலம் கிடைக்கும் இலங்கையின் குடியுரிமை இழக்கப்படாது என்பதுடன், இரட்டை குடியுரிமை பெற்ற பின்னர் நீங்கள் மீண்டும் தேசிய அடையாள அடடைக்காக விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. திருத்தங்கள் செய்வதற்காக அல்லது அடையாள அட்டை தொலைந்ததற்காக விண்ணப்பிக்கும் போது உங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தில் மாற்றங்கள் ஏற்படாது. 12 இலக்கங்களுடன் கூடிய சுஹுரு தேசிய அடையாள அட்டையை உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்.

  • தேசிய அடையாள அட்டைக்காக மாற்றுத்திறனாளிகளின் புகைப்படங்களைப் பெற்றுக் கொள்வதற்கு விசேட நடைமுறை பின்பற்றப்படுகிறதா? அது தொடர்பான தகவல்களை எங்கே பெற்றுக் கொள்ள முடியும்?

    மாற்றுத்திறனாளி ஒருவரின் ICAO தர நியமங்களுக்கு அமைவான, தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படத்தினைப் பெறுவதற்கு உரிய நபரை பதிவு செய்யப்பட்ட புகைப்பட நிலையமொன்றுக்கு அழைத்துச் செல்ல இயலாத சந்தர்ப்பத்தில், அருகிலுள்ள புகைப்பட நிலையத்திலிருந்து ஒரு புகைப்படக் கலைஞரை வீட்டிற்கு அழைத்து வருவதன் மூலம் புகைப்படத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு இயலாத சந்தர்ப்பத்தில், எடுக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக 0115226174 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

  • ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்திற்கு வந்து தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு, விண்ணப்பதாரிக்கு சமூகமளிக்க முடியாத சந்தர்ப்பத்தில் அவர் சார்பாக வேறொருவருக்கு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியுமா?

    தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பதாரி சமூகமளிக்க வேண்டியது கட்டாயமாகும். மாற்றுத்திறனாளி ஒருவராக அல்லது வயோதிபராக அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவராக அல்லது கடுமையான நோயாளியாக அல்லது திணைக்கள வளாகத்துக்குள் வருவதற்கு மிகவும் சிரமமான நிலையிலுள்ளவராக உள்ள ஒருவரின் இயலாமையைக் குறிப்பிட்டு கிராம சேவகர் மூலம் அதிகாரமளிக்கப்பட்ட கடிதத்துடன் சமூகமளிக்கும் விண்ணப்பதாரியின் தாய் அல்லது தந்தை அல்லது மனைவி அல்லது கணவன் அல்லது நெருங்கிய உறவினரொருவரிடம் மாத்திரம் தேசிய அடையாள அட்டை கையளிக்கப்படும்.

  • இறந்த நபரொருவரின் தேசிய அடையான அட்டையை ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தில் கையளிப்பது கட்டாயமானதா?

    இறந்த நபரொருவரின் தேசிய அடையாள அட்டை தவறாகப் பயன்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்கும், மேலும் வேறொருவரின் தேசிய அடையாள அட்டையை தம் வசம் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதாலும், இறந்த நபரொருவரின் தேசிய அடையாள அட்டையை ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திலோ அல்லது ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்களிலோ அல்லது தமக்குரிய கிராம சேவகரிடமோ கையளிப்பது கட்டாயமானதாகும்.

  • இறந்த நபரொருவரின் தேசிய அடையாள அட்டையின் தகவல்களை உறுதிப்படுத்தும் கடிதம் பெற்றுக் கொள்வது எவ்வாறு?

    ஒருவர் இறப்பெய்திய பின்னர் அவரது உறவினர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைக்கு அமைவாக, தொடர்புடைய ஆவணங்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், இறந்தவரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுதிப்படுத்திய கடிதங்கள் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்கள பிரதான அலுவலகத்தில் வழங்கப்படும். இதற்காக, ரூ. 500.00 அரச கட்டணம் அறவிடப்படும்.
    அதேவேளை, குறித்த கடிதத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இறந்த நபரின் நெருங்கிய உறவினரொருவர் வருகை தர வேண்டுமென்பதுடன், அவ்வாறு நெருங்கிய உறவினர் வருகை தர முடியாத சந்தர்ப்பத்தில் மாத்திரம் கிராம சேவகரின் சிபாரிசுடன் அதிகாரமளிக்கப்பட்ட கடிதத்தைக் கொண்டு வரும் நபருக்கு தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதிப்படுத்திய கடிதம் வழங்கப்படும்.

  • வெளிநாட்டுத் தூதுக் குழுவுக்கு முன்வைப்பதற்காக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுதிப்படுத்தும் கடிதம் பெற்றுக் கொள்வது எவ்வாறு?

    விண்ணப்பதாரியின் தேவையின் நிமித்தம் வெளிநாட்டுத் தூதுக் குழுவுக்கு முன் வைப்பதற்காக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுதிப்படுத்தும் கடிதம் வழங்கும் போது, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஒப்புதலுடன் மேற்படி கடிதம் வழங்கப்படும். ஆனால், தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுதிப்படுத்தும் கடிதம் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர், சுஹுரு தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வது கட்டாயமானதாகும். தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுதிப்படுத்தும் கடிதம் பெற்றுக்கொள்வதற்காக அரச கட்டணமாக ரூ. 500.00 அறவிடப்படும்.

  • வேறொரு நிறுவனத்தில் நான் தேசிய அடையாள அட்டையை முன்வைத்த சந்தர்ப்பத்தில், எனது தேசிய அடையாள அட்டையிலுள்ள தகவல்களை உறுதிப்படுத்த முடியாது என தெரிவித்தனர். அப்படியாயின், தேசிய அடையாள அட்டையிலுள்ள தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்வது எவ்வாறு?

    ஏதேனும் ஒரு நிதி நிறுவனம் அல்லது வேறு நிறுவனத்தின் மூலம், ஒரு நபரின் தேசிய அடையாள அட்டையின் தகவல் திணைக்கள தரவுத் தளத்தில் இல்லையென தெரிவித்து ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் niclookup_ccu@drp.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்தினால், ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் இலக்கங்களை உறுதிப்படுத்தும் கிளையின் மூலம் குறித்த தேசிய அடையாள அட்டையின் தகவல்களை உறுதிப்படுத்தி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தகவல்கள் வழங்கி வைக்கப்படும்.

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்,
10வது மாடி, சுஹுருபாய,
ஶ்ரீ சுபூதிபுர வீதி,
பத்தரமுல்லை.

முக்கிய தொடர்புகள்

  • பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு
  • குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்
  • பதிவாளர் நாயக திணைக்களம்
  • உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு
  • அரசாங்க தகவல் மையம்
  • இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு

எமது சேவைகள்

  • தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளுதல்
  • தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதிப்படுத்துதல்
  • ICAO புகைப்படம் பெற்றுக்கொள்ளுதல்
  • பிற சேவைகள்

தொடர்புகளுக்கு

  • தொ.பே இல :(011) 5226100/
    (011) 5226126
  • தொலைநகல்: (011) 2862290
  • மின்னஞ்சல் : info@drp.lk

பதிப்புரிமை © 2023 ஆ.ப. தி. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.
இறுதி இற்றைப்படுத்தல்14 May 2025