ஒருநாள் சேவைக் கிளை

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் ஒரு நாள் சேவைப் பிரிவு பொதுமக்களுக்கு உடனடி மற்றும் நம்பகமான சேவையை வழங்குகிறது. கிராமசேவகர் மற்றும் பிரதேச செயலாளரின் உறுதிப்படுத்தல்களுடன் பிரதான காரியாலயத்திற்கு வருகை தரும் விண்ணப்பதாரர்களுக்கு ஒருநாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படுகிறது. ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பத்தரமுல்லை தலைமை அலுவலகத்திற்கு ஒரு நாள் சேவைக்காக தினத்தினை ஒதுக்கிவிட்டு வரும் விண்ணப்பதாரர் முதலில் சன்ஹித சேவா வளாகத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு அவர்களின் வருகை மற்றும் சன்ஹித சேவா வளாகத்தில் அனுமதிக்கப்படும் வருகையின் வரிசையில் காலை 7.30 மணி முதல் விண்ணப்பதாரர்களுக்கு எண்கள் வழங்கப்படும். பின்னர் குறித்த இலக்க ஒழுங்கில் 9வது மாடியில் A, D மற்றும் C பகுதியில் ஒரு நாள் சேவைத் பிரிவு நிறுவப்பட்டுள்ளது. 9 வது மாடியில் D பகுதியில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, ஒரு நாள் சேவைக்கான கட்டணத்தைச் செலுத்திய பின்னர், விண்ணப்பதாரர் தேசிய அடையாள அட்டை தயாரிக்கும் வரை 9வது மாடியில் C பகுதியில் காத்திருக்க வேண்டும். தேசிய அடையாள அட்டை தயாரித்த பின்னர் திணைக்களம் அனுப்பும் குறுஞ்செய்தியைப் பெற்ற பின்னர், விண்ணப்பதாரர் 9 வது மாடியில் உள்ள A பகுதிக்கு வந்து தனது தேசிய அடையாள அட்டையைப் பெறலாம். மேலும், தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான ஒரு நாள் சேவையை தென் மாகாண அலுவலகமும் வழங்குகிறது.


உதவி ஆணையாளர்
...
  பெயர் : திரு. R.M.P.K. ஜயரத்ன
  தொ.இல : 011 5226165
  மின்னஞ்சல் : ac_ods@drp.lk