.
சட்டக் கிளை

சாதாரண சேவை மற்றும் ஒருநாள் சேவையின் கீழ் முன்வைக்கப்படும் தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக சிக்கல்கள் எழும் போது சட்ட நிலவரங்களை கண்டறிந்து குறித்த விண்ணப்பதாரர்கள் அல்லது சம்மந்தப்பட்ட நிறுவனங்களுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தி தரவுகளை உறுதிப்படுத்தி கொள்வதன் மூலம் வெளிப்டைத்தன்மையுடன் கூடிய சேவை வழங்குவதே இதன் நோக்கமாகும். போலியான தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் தொடர்பான முறைப்பாடுகளை மோசடி விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி சட்ட நடவடிக்கைகள் எடுத்தலும் சரியான ஆவணங்கள் மற்றும் சரியான தகவல்களை மையப்படுத்தி தேசிய அடையாள அட்டை வழங்குதல் இக்கிளையின் பிரதான செயற்பாடாகும்.
மேலும் இக்கிளையின் மூலம் திணைக்களத்தின் மூலம் வழங்கப்படுகின்ற தேசிய அடையாள அட்டை இலக்கங்ளை உறுதிப்படுத்தல்கள் மூன்றாம் தரப்பினருக்கு தேவைப்படும் சந்தர்ப்பங்களில் குறித்த (அரச பாதுகாப்பு பிரிவு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மோட்டர் போக்குவரத்து திணைக்களம், குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தொழிலாளர் திணைக்களம்) போன்ற நிறுவனங்களுக்கு தகவல்களை வழங்குதலும் பொதுமக்களின் மூலம் திணைக்களத்திற்கு முன்வைக்கப்படும் தனியார், பொதுமக்கள் முறைபாடுகள் தொடர்பான விசாரணைளை மேற்கொண்டு நடுநிலையான சேவை வழங்கப்படுகின்றது.

பதில் ஆணையாளர்
dc_legal
  பெயர் : திரு சி.ஏ.கே. கல்எட்டும்பகே
  தொ.இல : 011 2 862 449
  தொலைநகல் : 011 2 862 378
  மின்னஞ்சல் : dc_legal@drp.lk
பதில் ஆணையாளர்
...
  பெயர் : திருமதி P.H.T. மதுபாஷினி
  தொ.இல : 011 5 226 167
  தொலைநகல் : 011 2 862 378
  மின்னஞ்சல் : ac_legal@drp.lk