திணைக்களத்தின் ஆரம்பம்


இந்நாட்டில் ஆட்களைப் பதிவு செய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சட்ட ரீதியான பின்புலம் 1968/06/22ம் திகதி 1968ம் ஆண்டின் 32ம் இலக்க ஆட்களைப் பதிவு செய்யும் சட்டமூலம் சட்டமாக்கப்படுவதுடன் ஆரம்பமாகிறது. 1971 ஏப்ரல் 5ம் திகதி இச்சட்டம் நடைமுறைப்படுத்தபடுவதற்கான நிபந்தனைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் 1971/10/01ம் திகதி இல.38, கெப்பெட்டிபொல வீதி, கொழும்பு 5 எனும் முகவரியில் ஆட்பதிவுத் திணைக்களம் நிறுவப்பட்டது.

இலங்கையில் ஆட்களைப் பதிவு செய்வதற்கான தேவைப்பாடு பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் தோட்ட தொழிலாளர்களாக பெருமளவான இந்திய வம்சாவழியினர் இந்நாட்டுக்குள் புலம்பெயர்ந்து வந்தமையும், 1947ம் ஆண்டில் இந்தியாவும், 1948ம் ஆண்டில் இலங்கையும் சுதந்திரமடைந்த பின்பு இரு நாடுகளுக்கிடையில் குடிவரவு, குடியகல்வு சட்ட திட்டங்களுக்கு அமைவாக இந்திய வம்சாவழியினருக்கு சட்டரீதியாக இரு நாட்டுக்கிடையில் பிரயாணிப்பதற்கான வழி பிறந்தமை மற்றும் இந்திய வம்சாவழியினர் இலங்கையர்களுடன் பெருமளவில் கலந்திருந்தமை போன்ற காரணங்களாலே ஏற்பட்டது. இதற்கமைவாக அன்றைய அரச தலைவர்களாக இருந்த ஶ்ரீ ஜவஹர்லால் நேரு மற்றும் டீ. எஸ்.சேனாநாயக்க ஆகிய பிரதமர்களின் தலைமையின் கீழ் இந்நாட்டிலிருந்த இந்திய வம்சாவழியினரின் பிரஜாவுரிமை தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு, இலங்கையின் பிரஜாவுரிமையை பெறுவதற்கு ஆர்வமுடையோர்களுக்கு விசேடமான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும், அந்த சட்டம் முறையாக செயற்படுத்தபடாமை காரணமாக, 1954ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கையெழுத்திடப்பட்ட நேரு – கொத்தலாவல ஒப்பந்தம், 1964 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கையொப்பமிடப்பட்ட சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி இந்திய வம்சாவளியினரின் ஒரு பகுதியினரை இலங்கையில் வசிப்பதற்கும் ஏனையோரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கு தீர்மானிக்ப்பட்ட போதும், அந்த தீர்மானமும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே மலேசியாவின் அடையாள அட்டை வழங்கும் முறையை ஆய்வு செய்ததன் பின்பு , இந் நாட்டுக்கு தேவையான முறையில் ஆட்களைப் பதிவுசெய்து தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சட்ட மூலம் உருவாக்கப்பட்டது.

திணைக்களம் கடந்து வந்த பாதை
விசேட நிகழ்வு ஆண்டு
முதல் தடவையாக அடையாள அட்டை வழங்குதல். 1972ம் ஆண்டு
தேசிய அடையாள அட்டை இலக்கத்தை தட்டச்சு செய்தல். 1996ம் ஆண்டு
கறுப்பு வெள்ளை புகைப்படத்திற்கு பதிலாக வர்ண புகைப்படத்துடன் வழங்குதல். 2005ம் ஆண்டு
கணனி பயன்பாட்டுடன் இலக்கமிடல் 2007ம் ஆண்டு
கணனி தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிங்களமொழி மூலம் பாடசாலை மாணவர்களின் அடையாள அட்டை அச்சிடல். 2009ம் ஆண்டு
திணைக்களத்தின் 335 பிரதேச அலுவலகங்கள் நிறுவப்படல். 2013ம் ஆண்டு
வட மாகாண அலுவலகம் நிறுவப்படல் 2013ம் ஆண்டு
கிழக்கு மாகாண அலுவலகம் நிறுவப்படல் 2013ம் ஆண்டு
சிங்கள மற்றும் தமிழ்மொழி மூலம் தகவல்களை அச்சிடல் 2014ம் ஆண்டு
ஆரம்பம் முதல் கொழும்பு 05 கெப்பட்டிபொல வீதியில் இயங்கி வந்த ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களம் பத்தரமுல்லை சுபூத்திபுர வழியில் அமைந்தள்ள சுஹருபாய கட்டிடத்தில் நிறுவப்படல். செப்டம்பர் 26, 2016
ஒன்பது இலக்கங்களுடன் கூடிய தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக அட்டையின் கடைசியில் வரும் v இலக்கத்தை அகற்றி 12 இலக்கங்களாக மாற்றியமை . 2016ம் ஆண்டு
இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குதல். 2017ம் ஆண்டு
வட மேல் மாகாண அலுவலகம் நிறுவப்படல் 2017ம் ஆண்டு
VPN தொழில்நுட்பத்தின் மூலம் விண்ணப்பங்களை நிழலுருப்படுத்தும் செயற்பாடு பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பித்தல் 2018ம் ஆண்டு
தென்மாகாண அலுவலகம் ஆரம்பம் மற்றும் ஒருநாள் சேவை செயற்படுத்தல். 2019ம் ஆண்டு
தேசிய அடையாள அட்டையின் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் நிகழ்நிலை முறைமை அறிமுகப்படுத்தல். 2020ம் ஆண்டு
திருத்தங்கள் மற்றும் மறு பிரதிக்காக விண்ணப்பிக்கப்படும் விண்ணப்ப படிவங்கள் மீழ்சுழற்சிக்கு உட்படுத்தலும் , அலுவலக நடவடிக்கைகளின்போது பாவிக்கப்படும் கடதாசிகளின் அளவை குறைப்பதன் பொருட்டு WhatsApp, Viber போன்ற சமூக வலைத்தளங்ளை பயன்படுத்தலும் மற்றும் கணனி திரையினூடாகவே ஆவணங்களின் உண்மைத்தன்மையை பரீட்சித்து தேவையான மாற்றங்ளை செய்வதற்காக share folder பாவித்தலும் மற்றும் மின்னஞ்சல் வசதிளை பயன்படுத்தல்.
பதிவாளர் நாயகத்திணைக்களத்துடன் இணைந்து புதிதாக பிறக்கும் குழந்தைகளின் பிறப்பு அத்தாட்சி பத்திரங்களில் இலங்கை அடையாள இலக்கத்தை (slin) வழங்கல். 2022ம் ஆண்டு
NIC Lookup 2022 / 2021ம் ஆண்டு