சமீபத்திய செய்தி

சமீபத்திய செய்தி

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை எண்ணுடன் பிறப்புச்சான்றிதழ் வழங்குதல்

2021 மார்கழி 14ம்திகதி அன்று எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின்படி ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் இணைந்து, இலங்கைப் பெற்றோர்களுக்கு இலங்கையில் பிறந்த குழந்தைகளுக்காக பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்புச்சான்றிதழிற்கு, ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை இலக்கம் (இலங்கை அடையாள இலக்கம்/SLIN) உள்ளிட்டு பிறப்புச்சான்றிதழை வழங்குதல் 01.08.2022 முதல் ஆரம்பிக்கப்படும். இது இரு திணைக்களங்களுக்குமிடையில் இணையத்தளத்தின் ஊடாக தகவல்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் இது மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இதன் ஆரம்பகட்டமாக கம்பஹா, தெஹிவளை, ஹகுரன்கெத்த, குருநாகல், இரத்தினபுரி மற்றும் தமன்கடுவ ஆகிய பிரதேச செயலகங்களில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
br> அத்தகைய பிறப்புச்சான்றிதழ்களைப் பெற்ற அனைத்துப் பிரஜைகளும் 15வயதை எட்டிய பின்னர் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள ஆட்பதிவுத்திணைக்களத்திற்கு விடுக்கும் கோரிக்கைக்கு அமைய, மேற்குறித்த இலக்கத்துடன்(SLIN) தேசிய அடையாள அட்டையைப் பெற முடியும். இந்த அமைப்பின் மூலம் தனிநபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தல் பிறந்தது முதல் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒரே அடையாள எண் பயன்படுத்தப்படுவதால்.பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் கல்வி, சுகாதாரம், நிதி மற்றும் சமூக தகவல்களை எளிதில் சேமித்து வைக்க முடியும், மேலும் ஒரே எண்ணில் தகவல் பதிவு செய்யப்படுவதால், அந்த நிறுவனங்களின் சேவைகளை பொதுமக்கள் பெறுவது எளிதாக இருக்கும்.

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை எண்ணுடன் பிறப்புச்சான்றிதழ் வழங்குதல்